For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய மதுக்கடைகளை திறந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்- முத்தரசன் எச்சரிக்கை

மதுக்கடைக்கு எதிராக திருப்பூர் சாமளா புரத்தில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

Google Oneindia Tamil News

திருப்பூர்: மதுக்கடைக்கு எதிராக திருப்பூர் சாமளா புரத்தில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்தார். புதிய மதுக்டைளை திறந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

திருப்பூர் சாமளாபுரத்தில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி காலை முதல் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்பகுதி பொதுமக்கள் மீது காவல்துறையினர் சரமாரி தடியடி நடத்தினர். ஆண்கள் பெண்கள் என அனைவரையும் விரட்டிவிரட்டி போலீசார் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் காயமைடைந்தனர்.

CPI state secretary Mutharasan condemns the police for lahti charging in Tirupur samalapuram

சிலரின் மண்டை உடைந்தது. காவல்துறையின் இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் போலீசாரின் தடியடி தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு புதிய மதுக்கடைகளைள திறக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை ஊருக்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்த அவர், அரசு புதிய கடைகளை திறக்க முயற்சித்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

English summary
CPI state secretary Mutharasan condemns the police for lahti charging in Tirupur samalapuram. He warns that if the govt try to open new tasmac shops it will lead law and order issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X