For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்டவாளத்தில் விரிசல்!… செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அவ்வழியாக வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு ஒன்றரை மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நேற்று மாலை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு வந்தது. இந்த ரயில் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே வந்தபோது அங்கு ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரயில் அங்கு நிறுத்தப்பட்டது. உடனே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு விரிசல் சரிசெய்யப்பட்டது.

இதை தொடர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இதன்காரணமாக இன்று அதிகாலை 6.10 மணிக்கு நெல்லை வரவேண்டிய இந்த ரயில் காலை 7.40 மணிக்கு நெல்லை வந்தது.உரிய நேரத்தில் ரெயில் தண்டவாளத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

English summary
A possible accident was averted when the alert driver of the Tiruchendur- Chennai Chendur Express brought the train to a halt upon sensing that something was wrong with the track. The Chendur Express held up for about 1.30 minutes at Maniyanchi Junction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X