"உறுப்பில்" சூடு.. பீறிட்ட சபலத்தில் சரிந்த இளைஞர்.. துணியை திணித்து.. மொத்தம் 8 இடங்களாம்.. கொடுமை

இளைஞருக்கு அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: திருமணமான பெண்ணை, ரகசியமாக சந்திக்க சென்ற இளைஞர், குடும்ப உறுப்பினர்களிடம் வசமாக சிக்கி கொண்டுள்ளார்.. இப்போது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது காரனுர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் மாணவர் பூவரசன்.. 21 வயதாகிறது.. ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் எந்நேரமும் சோஷியல் மீடியாவிலேயே நேரத்தை செலவிடுபவராம்.. இவருக்கு, திருமணமான பெண் ஒருவர், வாட்ஸ்அப் மூலம் அறிமுகமாகி உள்ளார்.. அந்த பெண்ணும் அதே ஊரை சேர்ந்தவர்தான்.

 களைந்த ஆடைகள்

களைந்த ஆடைகள்

ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணை, தன்னுடைய வலையில் வீழ்த்திவிட்டார் பூவரசன்.. இந்த விஷயம் பெண்ணின் வீட்டுக்கு தெரியவந்ததையடுத்து பூரவசனை கூப்பிட்டு உறவினர்கள் அனைவரும் கண்டித்துள்ளனர்.. ஆனால், அப்போதும் பூவரசன், அந்த பெண்ணுடன் பழகுவதையும் பேசுவதையும் நிறுத்தவில்லை.. இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் கணவர் வெளியூர் சென்றிருக்கிறார்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பூவரசன், நேரடியாக அந்த பெண்ணின் வீட்டிற்குள்ளேயே நுழைந்துவிட்டார்.. பூவரசன் பெண்ணின் வீட்டுக்குள் நுழைவதை, பெண்ணின் உறவினர்களே கண்ணால் பார்த்துவிட்டனர்..

 வாயில் துணி

வாயில் துணி

அதனால், அவர்களும் பின்னாடியே சென்று, வீட்டிற்குள் நுழைந்தனர்.. அவர்களை பார்த்ததுமே பூவசரனுக்கு தூக்கி வாரிப்போட்டது.. உறவினர்கள் அங்கேயே பூவரசனை மடக்கி பிடித்தனர்.. "இங்கே என்ன உனக்கு வேலை?" என்று கேட்டனர்.. அதற்கு பூரவசன், "தாகமாக இருந்துச்சு, தண்ணி குடிக்க வந்தேன்" சொல்லி சமாளித்திருக்கிறார்.. ஆனாலும், அதை காதில் வாங்காத உறவினர்கள், பூவரசனை அங்கேயே வெளுத்தெடுத்தனர்.. அவரது ஆடைகளை களைத்தனர்.. நிர்வாணப்படுத்தி அங்கேயே படுக்க வைத்துள்ளனர்.. கை, கால்களை கட்டிப்போட்டுள்ளனர்.. வாயில் துணியையும் வைத்து அடைத்துள்ளனர்..

 அந்தரங்க உறுப்பு

அந்தரங்க உறுப்பு

"தண்ணி தானே வேணும்? இதோ செம்பில் வருகிறது" என்று சொல்லி, ஒரு செம்பை அடுப்பில் வைத்து பழுக்க காய்ச்சி எடுத்து வந்து, பூவசரனின் அந்தரங்க உறுப்பு மற்றும் பின் பகுதியில் சூடு வைத்துள்ளனர்.. மொத்தம் 8 இடங்களில் சூடு வைத்திருக்கிறார்கள்.. வாயில் துணி அடைக்கப்பட்டிருந்ததால், அவரால் கத்தி கூச்சல் போடவும் முடியவில்லை. இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டிய உறவினர்கள், அவரை அழைத்து வந்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு சென்றுள்ளதாக தெரிகிறது..

 சூடுபட்ட பூனை

சூடுபட்ட பூனை

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பூவரசனின் அம்மா, கச்சிராயபாளையம் போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும், பூவரசனிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து, அவரது வாக்குமூலத்தையும் பெற்றனர்.. பூவரசனுக்கு சூடு வைத்த அஜித்குமார், தமிழ்செல்வன், மேலபழங்கூர் ராம்குமார் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. தண்ணீர் குடிக்க போன பூனை, சூடுபட்ட நிலையில், இப்போது புரண்டு கூட படுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறதாம்.. ஆனாலும், ஈரவிரக்கமே இல்லாமல் இப்படியா தண்டனை தருவது? மனித உயிர்கள் அவ்வளவு மலிவாகிவிட்டதா??

சொம்பு

சொம்பு

வீட்டிற்குள் நுழைந்து தண்ணி வேண்டும் என்று கேட்டாராம் பூவரசன்.. அப்போதுதான், பின்னாடியே சென்ற 3 பேரும், வீட்டில் இருந்த சொம்பினை எடுத்து அதை கேஸ் அடுப்பில் வைத்து சூடுபடுத்தி பூரவசனின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்ததாக கூறப்படுகிறது. வலியில் அலறியபோது, பூவரசனின் வாயில் துணி வைத்து அடைத்துள்ளதால், அவரது அலறல் சத்தம் வெளியில் கேட்கவில்லை. பூவசரனின் உடலில் 8 இடங்களில் சூடுவைத்த அந்த நபர்கள், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டிவிட்டு, மருத்துவமனையிலும் அனுமதித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்... நடந்த நிகழ்வுகளை பூவரசன் வாக்குமூலமாக சொன்னதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்துவிடுவாம் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+