மாதி வலுவிழந்தது.. ஆனால் சென்னையை நோக்கி நகர்வதால் கன மழை வருமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதி புயல் வலுவிழந்து விட்டபோதிலும், அது சென்னையை நோக்கி வருவதால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:

''தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த மாதி புயல், வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது.

Cyclone Madi loses intensity

கனமழை

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தற்போது சென்னையில் இருந்து 270 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால், அடுத்த 12 மணி நேரத்தில் வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும்.

சென்னையில் மேக மூட்டமாக காணப்படும் என்றும், இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்'' எனக் கூறப்பட்டுள்ளது.

நாகையில் கடல் சீற்றம்

மாதி' புயல் உருவானதைத் தொடர்ந்து நாகை மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 5 நாள்களாக நாகை மாவட்டத்தில் பைபர் படகு மூலமான மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு

புயல் எச்சரிக்கையையொட்டி, நாகை துறைமுக அலுவலகத்தில் கடந்த 4 நாள்களாக நீடித்து வந்த 2-ம் எண் புயல் எச்சரிக்கை புதன்கிழமை குறைக்கப்பட்டு 1-ம் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+