48வது பிறந்தநாள்... கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் தயாநிதிமாறன்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகனான தயாநிதி மாறன், கடந்த 1966ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தஞ்சாவூரில் பிறந்தவர். திமுக தலைவர் கருணாநிதி இவருக்கு தாத்தா முறை.
கடந்த 2004ம் ஆண்டு முதல் மே 2007 வரை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் அமைச்சராக தயாநிதி பதவி வகித்தார். பின்னர், 2009 - 11 வரையிலான கால கட்டத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

ஏர்செல் மாக்சிஸ் முறைகேட்டில் இவருக்கு தொடர்பிருப்பதாக மத்திய புலனாய்வுச் செயலகம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு ஜூலை மாதம் தனது மத்திய அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் ராஜினாமா செய்தார். 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதி மாறன், கடந்த லோக்சபா தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில், தயாநிதிமாறன் இன்று தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையொட்டி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

கி.வீரமணியும் வாழ்த்து பெற்றார்...
இதேபோல், கடந்த 2ம் தேதி தனது 82வது பிறந்தநாளைக் கொண்டாடிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கும் அறிக்கை வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார் திமுக தலைவர் கருணாநிதி.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார் கி.வீரமணி.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications