அண்ணா சிலைக்கு யார் முதலில் மாலை அணிவது என்பதில் போட்டி.. சென்னையில் தினகரன்-தீபா ஆதரவாளர்கள் மோதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் டிடிவி தினகரன் - தீபா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

அறிஞர் அண்ணாவின் 109வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

 Deepa and TTV Dinakaran followers clash with each other at Chennai

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு காலை 11 மணிக்கு மாலை அணிவிக்க டிடிவி தினகரன் வருவதாக இருந்தது. அதே நேரம், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் தீபாவும், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த தினகரன் ஆதரவாளர்கள், தினகரன் வரும் நேரமாகிவிட்டது. அவர் மாலை அணிவித்த பிறகு நீங்கள் மாலை அணிவிக்கலாம் என கூறினர். இதற்கு தீபாவுடன் வந்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தீபாதான் முதலில் மாலை போடுவார் என கூறினர்.

இதனால், தினகரன்-தீபா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்பிறகு தீபா மாலை அணிவித்துவிட்டு கிளம்பினார். பின்னர் தினகரனும் மாலை அணிவித்து திரும்பினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deepa and TTV Dinakaran followers clash with each other at Chennai, when both the leaders comes to felicitate Anna statue.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற