இவுங்க நினைப்ப நினைச்சா.... ஓபிஎஸ் அணியில் உச்சபதவியை கேட்ட தீபா!
அதிமுக ஓபிஎஸ் அணியில் எப்படியும் மிக முக்கியமான பதவி ஒன்றை பெறும் வகையில் இன்னமும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கொண்டிருக்கிறாராம் "மேட்" தீபா
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துவிட்டு வீட்டுக்குள்ளே தீபா ஒன்றும் சும்மா முடங்கிவிடவில்லையாம்... ஓபிஎஸ் அணியில் முக்கிய பதவி கேட்டு பிசியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை மெரினா கடற்கரையில் ஜெ. நினைவிடத்தில் தீபா- ஓபிஎஸ் சந்திப்பு அரங்கேறியது. இதனைத் தொடர்ந்து இருவரும் இரு கரங்களாக செயல்படுவோம் என அறிவித்தனர்.

மேட் பேரவை
அதன்பின்னர் ஓபிஎஸ் அணி பக்கம் தீபா போகவில்லை. பின்னர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை உருவாக்கியதாக அறிவித்தார் தீபா.

அதிர வைத்த தீபா
அப்போது ஓபிஎஸ் அணியில் தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்; பொதுச்செயலர் பதவியும் தமக்கே தர வேண்டும் என தீபா அடம்பிடித்ததாகவும் இதை ஏற்க ஓபிஎஸ் அணி மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இதன் பின்னரும் ஓபிஎஸ் அணியுடனான பேச்சுவார்த்தையை தீபா கைவிடவில்லை.

பொதுச்செயலர் பதவி
தனிப் பேரவை, தனித்துப் போட்டி என ஒரு பக்கம் அறிவித்துக் கொண்டே ஓபிஎஸ் அணியுடனான பேச்சுவார்த்தையையும் தீபா நடத்திக் கொண்டே இருந்தார். இந்த பேச்சுவார்த்தையில் தீபா, அதிமுக பொதுச்செயலர் பதவியை தமக்கு தந்தே ஆக வேண்டும் என்பதில் ரொம்பவே அடம்பிடிக்கிறாராம்.

தொடரும் பேச்சுவார்த்தை
இதனால்தான் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யப் போகாமல் வீட்டிலேயே இருந்தாராம் தீபா. தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் நடைபெறும் நிலையில் தீபா கேட்கிறபடி பொதுச்செயலர் பதவியை கொடுப்பதாக உறுதியளிக்கலாம் என்கிற முடிவுக்கும் வந்துள்ளதாம் ஓபிஎஸ் அணி.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications