விடிய விடிய லிங்குசாமி அலுவலகத்தில் ஐடி ரெய்டு

தொடர்ந்து வெற்றிப் படங்கள், வசூலில் சாதனை படைக்கும் படங்கள் வெளியாகும்போது அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களை வருமான வரித்துறையினர் குறி வைத்து ரெய்டு நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது லிங்குசாமி, வருமான வரித்துறையினரின் ஸ்கேனரில் சிக்கியுள்ளார். அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறது லிங்குசாமியின் தயாரிப்புகள். இந்த பின்னணியில் நேற்று அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
லிங்குசாமி அலுவலகம் சென்னை வளசரவாக்கம், ஜானகி நகர், லாமெக் தெருவில் உள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு லிங்குசாமியின் அலுவலகத்திற்கு வந்த வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை தொடர்ந்து இரவு முழுவதும் நீடித்து இன்று காலை வரை தொடர்ந்தது. இந்த அதிகாரிகள் அனைவரும் டெல்லியில் இருந்து வந்திருந்தனர். மொத்தம் 12 பேர் ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications