தினகரனுக்கு எதிராக "லுக்அவுட்" நோட்டீஸ்.. டெல்லி போலீஸ் பிறப்பித்தது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த புகாரின்பேரில் டிடிவி தினகரன் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க டெல்லி போலீஸார் அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உஷார்படுத்தியுள்ளனர்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து சாதகமான தீர்ப்பு வர வேண்டும் என்பதற்காக எந்த எக்ஸ்ட்ரீம் ஸ்டெப்புக்கும் போக முடியும் என்பதற்கு தினகரன் எடுத்துக்காட்டு.

அதன்படி தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு இருப்பதாக கூறப்படும் டெல்லி மோசடிப் பேர்வழி சுகேஷ் சந்திரசேகரிடம் ரூ.60 கோடி வரை பேரம் பேசி முன்பணமாக ரூ.1.30 கோடி கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தரகர் கைது

தரகர் கைது

இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தில் தினகரனுக்கு சாதகமான நிலையை பெற்று தருவதற்காக லஞ்சம் வாங்கியதாக சுகேஷை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் ரூ.10 கோடி ஹவாலா மூலம் கொச்சியிலிருந்து டெல்லிக்கு அனுப்பி வைத்தது தினகரன்தான் என்று ஆணித்தரமாக சுகேஷ் தெரிவித்தார்.

தொலைபேசி உரையாடல்கள்

தொலைபேசி உரையாடல்கள்

சுகேஷுடன் தினகரன் பேசிய தொலைபேசி உரையாடல்கள் பதிவுகளை டெல்லி போலீஸார் ஆராய்ந்ததில் கடந்த 15-ஆம் தேதி தினகரன், சுகேஷை பலமுறை தொடர்பு கொண்டது தெரியவந்தது. இதையடுத்து தினகரன் மீது 3 வழக்குகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சென்னைக்கு வருகை

சென்னைக்கு வருகை

டிடிவி தினகரனை கைது செய்ய டெல்லி போலீஸார் நேற்று சென்னை வருவதாக இருந்தது. ஆனால் அவர்கள் வரவில்லை. தரகர் சுகேஷிடம் விசாரணை நடத்தி வருவதால் பல்வேறு ஆதாரங்களை சேகரித்துவிட்டு சென்னை வந்து தினகரனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தேடப்படும் குற்றவாளி

தேடப்படும் குற்றவாளி

டிடிவி தினகரன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ளதால் அவர் எந்த நேரத்திலும் போலீஸார் கண்ணில் மண்ணை தூவலாம் என்பதால் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு டெல்லி குற்றப் பிரிவு போலீஸார் தினகரன் பற்றிய தகவல்களை அனுப்பி உள்ளனர். விமானம் மற்றும் கப்பல் மூலம் அவர் வெளிநாட்டுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
To prevent TTV Dinakaran to go to abroad, police has announced that he is a wanted person.
Please Wait while comments are loading...