ஜெ. குடும்பத்தை சேர்ந்த யாரையும் சந்திக்க முடியாது.. டெல்லி காட்டத்தால் விரக்தியில் தீபா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா குடும்பத்தைச் சேர்ந்த யாரையுமே சந்திக்க முடியாது என டெல்லி திட்டவட்டமாக கூறிவிட்டதால் தீபா கடும் விரக்தியடைந்துள்ளாராம்.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவுக்கு உரிமை கோரி தீபாவும் அவரது சகோதரர் தீபக்கும் அண்மையில் பகிரங்கமாக மோதிக் கொண்டனர். இந்த மோதலின் போது தீபா அநாகரிகமாக நடந்து கொண்டார்.

அர்ச்சனைகள்

அர்ச்சனைகள்

அத்துடன் தீபக்கை, புறம்போக்கு உள்ளிட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தார். அதேபோல் தீபாவின் கணவர் மாதவனை டிரைவர் ராஜா ஏக வசனத்தில் பேசினார். அதை தீபா கண்டுகொள்ளாமல் அமைதி காத்தார்.

பிரதமரை சந்திப்பேன்

பிரதமரை சந்திப்பேன்

இந்த களேபரத்தின் போது, தாம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து முறையிடப் போகிறேன் என பேட்டியளித்தார். இதைத் தொடர்ந்து 'ஆடிட்டர்' மூலமாக பிரதமரை சந்திக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார் தீபா.

டெல்லி மறுப்பு

டெல்லி மறுப்பு

ஆனால் டெல்லியோ, ஜெயலலிதா குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் சந்திக்க விரும்பவில்லை என திட்டவட்டமாக பதிலளித்துவிட்டது. இதனால் தீபா கடும் விரக்தியடைந்து போயுள்ளாராம்.

சமாளிக்கும் தீபா

சமாளிக்கும் தீபா

அதேநேரத்தில் தம்மை சந்திப்பவர்களிடம் பிரதமர் வெளிநாடு சுற்றுப் பயணங்களை தொடர்ந்து மேற்கொள்வதால் சந்திக்க முடியாமல் இருக்கிறது... விரைவில் டெல்லி போவேன் என அடித்து விடுகிறாராம். டெல்லி திரும்பிப்பார்க்க தயாரில்லை என்பதை மறைக்க கீழே குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கதையாக அள்ளிவிடுகிறாரே தீபா என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources said that J Deepa was very disappointed for Delhi not willing to meet her.
Please Wait while comments are loading...