முட்டாள்தனத்தை மறைக்க 2000 நோட்டு.. மீண்டும் ரூ.1000 நோட்டை கொண்டு வருவார்கள்: ப.சிதம்பரம் விமர்சனம்
சென்னை : "பணமதிப்பிழப்பு என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க ரூ.2000 நோட்டுகள் கட்டுக்கட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது. மீண்டும் 1000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்." என விமர்சித்துள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
இந்தியாவில் கடந்த 2016 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் இனி ரூ. 2 ,000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது.

2000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில். 2019ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் வெகுவாகக் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே ரூ.2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவை முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். "எதிர்பார்த்ததைப் போல அரசாங்கம்/ஆர்பிஐ ரூபாய் 2000 நோட்டை திரும்பப் பெற்றுள்ளது, நோட்டுகளை மாற்றுவதற்கு செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது.
ரூ. 2000 நோட்டு என்பது பரிமாற்றத்திற்கான சரியான தொகை அல்ல. 2016 நவம்பரிலேயே நாங்கள் இதைச் சொன்னோம். ரூ. 2000 நோட்டுகள் க்ளீன் நோட் அல்ல. மக்கள் தங்கள் கறுப்புப் பணத்தை, தற்காலிகமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

ரூ. 500, ரூ. 1000 பணமதிப்பிழப்பு என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க ரூ.2000 நோட்டுகள் கட்டுக்கட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது. 500 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கிக்கு கட்டாயம் ஏற்பட்டது.
இப்போது மீண்டும் ரூ. 2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மொத்தத்தில் பணமதிப்பிழப்பு என்பது சாதாரண மக்களுக்கு எதிரானது என்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்கிறது. மீண்டும் 1000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications