கருப்பு பணம், கள்ள சந்தை ஒழியாது... சாமானியர்களுக்கே துன்பம் அதிகம்: ப. சிதம்பரம் தாக்கு
ரூபாய் நோட்டுகள் மாற்றத்தால் கருப்பு பணம் ஒழிந்துவிடாது என்று ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
சென்னை: ரூபாய் நோட்டுகள் மாற்றத்தால் கருப்பு பணமோ, கள்ள சந்தையோ ஒழிந்துவிடாது; சாமானியர்களுக்கே துன்பம் அதிகம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ப. சிதம்பரம் கூறியதாவது:
நாட்டில் கருப்பு பணத்தையும், கள்ளச்சந்தையையும் ஒழிக்கப்போவதாக கூறி ரூ.500, 1000 நோட்டுகளின் செயல்பாட்டை திடீர் என மத்திய பாரதிய ஜனதா அரசு முடக்கி உள்ளது. ரூ.500, 1000, நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவிக்கவில்லை.

ரூ2,000
புதிய நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்றுதான் அறிவித்துள்ளார். புதிதாக ரூ.2000 நோட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

86% புழக்கம்...
2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்திவிட்டு கருப்பு பணத்தையும், கள்ளச்சந்தையையும் ஒழிக்கப்போகிறேன் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. நாட்டு மக்கள் பயன்படுத்தும் பணத்தில் 86% ரூ. 500, 1000ம் நோட்டுகள் தான். மீதி 14% தான் 100 ரூபாய்களும் அதற்கு குறைந்த ரூபாய்களும்.

நியாயமே இல்லை..
நாட்டில் உள்ள 400 கோடி கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்கு ரூ. 17 லட்சம் கோடி ரூபாயையும் முடக்குவது எந்த விதத்தில் நியாயம்? இந்த புதிய திட்டத்தில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை.

துயரம்தான் அதிகம்
2012ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு ஆட்சி நடந்த போது இதேபோல் ஒரு திட்டத்தை செயல்படுத்தப்படுவது பற்றி ஆலோசித்தோம். தற்போது மோடி அறிவித்துள்ள இந்த புதிய திட்டத்தால் கருப்பு பணமும் ஒழியப் போவதில்லை, கள்ளச்சந்தையும் ஒழியப் போவதில்லை. சாமானிய மக்களுக்குதான் அதிக துன்பத்தை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications