செல்லாமல் போன 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் - நினைவஞ்சலி செலுத்தும் நெட்டிசன்ஸ் #DeMoDisaster

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி பணமதிப்பு நீக்கம் அறிவித்து ஓராண்டு நிறைவடைகிறது. ஒரே நாள் இரவில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன.

மக்கள் பட்ட பாடு சொல்ல முடியாது. வங்கி வாசல்களிலும், ஏடிஎம் வாசல்களிலும் நின்ற வயது முதியவர்கள் நோயாளிகள் உயிரிழந்தனர். இது ஓரு பேரழிவு என்று எதிர்கட்சியினர் சித்தரித்தனர். பணத்தை வீட்டில் அடுக்கி வைத்திருந்த பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி அறிவித்து ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் #DeMoDisaster என்ற ஹேஸ்டேக் போட்டு தங்களின் கோபத்தை பதிவிட்டு வருகின்றனர்.

ஓராண்டு நிறைவு

செல்லாமல் போன 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார் ஒரு வலைஞர்

சென்னை பேரழிவுகள்

2004ல் சுனாமி, 2012ல் நிலநடுக்கம், 2015ல் பெருவெள்ளம் என எத்தனையோ பேரழிவுகளை பார்த்து சமாளித்த சென்னைவாசிகள் 2016ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்கம் என்ற பேரழிவையும் சமாளித்தோம் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

இதய அஞ்சலி

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி அழைத்துள்ளார் இந்த வலைஞர்.

மக்களும் தான்

மத்திய பா ஜ க அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மதிப்பிழந்தது 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமல்ல மக்களும் தான் என்று பதிவிட்டுள்ளார் இந்த வலைஞர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Demonitization one year end social media people post modi made disaster.Life of a Chennaite 2004: Survived Tsunami 2012: Survived Earthquake 2015: Survived Chennai Floods 2016: Survived Demonetization #DeMoDisaster

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற