தேனி மாவட்டத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் உருவ பொம்மையை எரிக்க தினகரன் ஆதரவாளர்கள் முயற்சி.. தள்ளுமுள்ளு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரது உருவ பொம்மைகளை தினகரன் ஆதரவாளர்கள் எரிக்க முயற்சி செய்தனர்.

இதனை அறிந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அங்கு வந்து எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் தினகரன் ஆதரவாளர்களை கைது செய்தனர்.

 Dinakaran faction AIADMK cadre burn effigy of Edappadi Palanisamy and OPS

இதேபோல சென்னை அடையாறு, மன்னார்குடி பகுதிகளிலும் நேற்று தினகரன் ஆதரவாளர்கள், பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தினர்.

சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அணியினர் கூட்டிய பொதுக்குழுவில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dinakaran faction AIADMK cadre burn effigy of TN CM Edappadi Palanisamy and Dy CM O Panneerselvam in Theni district.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற