நட்டு கழன்றவர், பதவிக்காக சசி காலில் விழுந்தவர்.. ஜெயக்குமாரை விளாசிய தங்க தமிழ்ச்செல்வன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் அமைச்சர் ஜெயக்குமாரை நட்டு கழன்றவர், பதவிக்காக சசிகலா காலில் விழுந்தவர் என சரமாரியாக வசைபாடியுள்ளார்.

டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Dinakaran supporter Thanga tamilselvan scolds Minister Jayakumar harshly

உள்ளாட்சி நிர்வாகத்தை சரி செய்தால் தான் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். மேலும் மத்திய அரசை எதிர்க்க துணிச்சல் இல்லாத அரசாக எடப்பாடி அரசு உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

சசிகலாவை சந்திக்கக்கூடாது என எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாடு விதித்துள்ளதகாவும் அவர் கூறினார். அமைச்சர் ஜெயக்குமார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஜெயக்குமார் நட்டுக்கழன்றவர் என்றார்.

ஜெயக்குமாருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். பதவிக்காக சசிகலாவின் காலில் விழுந்த கெஞ்சியவர் தான் ஜெயக்குமார் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் சாடினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dinakaran supporter Thanga tamilselvan scolds Minister Jayakumar harshly. He said Edappadi palanisami controled MLAs and ministers to do not meet sasikala.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற