திரைப்படமாகிறது உலகையே அதிரவைத்த ஜல்லிக்கட்டுக்கான வரலாறு பேசும் மெரினா புரட்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தையே கதி கலங்க வாத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை இயக்குநர் பாண்டியராஜின் நிறுவனம் விரைவில் திரைப்படமாக்கவுள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாடுகள் துன்புறுத்தப்படவில்லை என்று கூறி அவணியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கடந்த ஆண்டு போராட்டம் நடைபெற்றது.

Director Pandiyarajan produces Marina Puratchi

இவர்களுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் சில ஆயிரக்கணக்கிலான இளைஞர்கள் திரண்டனர். ஒரு வாரம் நீடித்த இந்த போராட்டத்தின்போது நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் போராடினர். இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அதன் பின்னர் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த தமிழக சட்டசபையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. மெரினா என்றால் புரட்சி உருவான இடம் என்பதை யாராலும் மறக்க முடியாத அளவுக்கு போராட்டம் புது அடையாளத்தை தந்தது.

இந்த போராட்டம் மெரினா புரட்சி என்ற பெயரில் திரைப்படமாக உருவாகவுள்ளது. இதை பசங்க தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் பாண்டியராஜ் தயாரிக்கவுள்ளார். விரைவில் ட்ரெய்லர் வரவுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Director Pandiyaraj's Pasanga production produces Marina Puratchi. The theme of the film is about a big protest for Jallikattu in Marina beach.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற