For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போன வருஷம் எழுந்த உரசல்.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்த அமைதி பேச்சுவார்த்தை

Google Oneindia Tamil News

சென்னை: மதுரை அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில், எந்தவித பிரச்சனைகளும், மற்றும் கருத்து வேறுபாடுகளும் எழாத வண்ணம் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு, விழா நடத்துவது தொடா்பாக இருதரப்பினரிடையே பிரச்னை எழுந்தது. எனவே, நீதிமன்ற உத்தரவின்பேரில் நீதிபதி, வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சியா் தலைமையில் கடந்த ஆண்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.

Discussion held over Madurai Avaniyapuram Jallikattu

இந்நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற ஏறத்தாழ 20 நாட்களே உளளதால், கிராம மக்கள் சாா்பில், ஜல்லிக்கட்டை, அமைதியான முறையில் நடத்தும் வகையில் இருதரப்பினரிடையே சமரசப் பேச்சுவாா்த்தை 2 தினங்கள் முன்பு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அவனியாபுரம் காவல் நிலையத்தில் தெற்கு வட்ட தாசில்தார் அனிஸ் அக்தார் , காவல்துறை உதவி ஆணையர் ராமலிங்கம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அவனியாபுரம் கிராம கமிட்டி சாா்பில் ராமசாமி, மாயாண்டி, காா்த்திக் உள்ளிட்டோரும், தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்ணன், பெரியசாமி, பாக்கிய தேவா், கருப்பையா, தேவேந்திரகுல அமைப்பின் சாா்பில் செல்வம், வழக்கறிஞா் அன்பரசு, இளஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த பேச்சு வார்த்தையில், அவனியாபுரம் கிராம கமிட்டி உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வரும் 28 ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற கூட்டத்தில், 2வது கட்ட பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

English summary
Discussion was held over Madurai Avaniyapuram Jallikattu festival in front of police officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X