For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏற்காடு இடைத் தேர்தல்.. நாளை மனுக்கள் பரிசீலனை.. தேமுதிக?

Google Oneindia Tamil News

சேலம்: ஏற்காடு இடைத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படவுள்ளன. இதுவரை தேமுதிக சார்பில் யாரும் மனு செய்யவில்லை. எனவே அக்கட்சி போட்டியிடவி்ல்லை. அதேசமயம், அக்கட்சி யாருக்கு ஆதரவு தரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏற்காடு இடைத் தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 9ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் மனு தாக்கல் முடிவடைந்தது.

திமுக, அதிமுக வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 27 பேர் மனு செய்துள்ளனர். இதில் திமுக, அதிமுகதான் முக்கியக் கட்சிகள். மற்றவர்கள் பெரும்பாலும் சுயேச்சைகளே.

பாமக, பாஜக ஆகியவை புறக்கணித்து விட்டன. மதிமுக போட்டியிடவி்லை. கம்யூனிஸ்டுகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து விட்டன. காங்கிரஸும் ஒதுங்கிக் கொண்டு விட்டது. தேமுதிகவின் நிலைதான் தெரியவில்லை.

நாளை ஏற்காடு தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படவு்ளன. 20ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

Vijayakanth

தேமுக தரப்பில் பெருத்த அமைதி காணப்படுகிறது. அவர்கள் ஏன் போட்டியிடவி்ல்லை என்று தெரியவில்லை. ஒரு வேளை கடைசி நேரத்தில் ஏதாவது சுயேச்சைக்கு ஆதரவு தெரிவித்து அவரையே கட்சி வேட்பாளராக அறிவிப்பார்களோ என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதேசமயம், திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க தேமுதிக முடிவு செய்திருப்பதாகவும் ஒரு செய்தி பரவியு்ள்ளது.

இதுவரை எந்த ஒரு தேர்தலையும் விடாமல் போட்டியிட்டு வந்த தேமுதிக இப்போதுதான் முதல் முறையாக பெரும் குழப்ப நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
DMDK is still silent over Yercaud by poll and the nomination papers are going to be scrutinized tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X