அந்த ஒரு தப்பை மட்டும் திரும்பவும் செய்யவே மாட்டோம்: பிரேமலதா விஜயகாந்த் சூளுரை
திருச்சி: அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது குறிப்பிட்டு பேசிய தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த், அந்த தவறை மட்டும் மீண்டும் செய்யவே மாட்டோம் என்று கூறினார்.
தேமுதிகவின் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறை கைதிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முசிறி அருகே தா.பேட்டையில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் விஜயகாந்த், பிரமேலதா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சட்டம்-ஒழுங்கு
விழாவில் பிரேமலதா பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. திருச்சி தொழில் அதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் 3 வருடங்களுக்கு மேல் ஆகியும். குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை. இப்போது தான் உண்மை அறியும் சோதனையும் நடத்திக்கொண்டுயிருக்கிறார்கள்.

ஆணுக்கு ஒரு நீதி
விஜயகாந்த் குடித்துவிட்டு சட்டசபைக்கு வருகிறார் என்று ஜெயலலிதா அவதூறாக பேசினார். ஜெயலலிதா - மோடி சந்திப்பை பேசியதற்காக இளங்கோவன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்து அதிமுகவினர் வன்துறை போராட்டங்கள் நடத்துகிறார்கள். ஆனால் விஜயகாந்த்துக்கு எதிராக ஜெயலலிதா பேசியது மட்டும் எப்படி நியாயப்படுத்தப்படுகிறது?, அப்படியானால், ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியா?

மதுவிலக்கு
தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு கொள்கையை சட்டசபையில் அறிவிக்க வேண்டும். அல்லது அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்றாவது அறிவிக்க வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியவில்லை என்றாலும் படிப்படியாக மதுவிலக்கு அமலுக்கு கொண்டு வரவேண்டும். காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு ஜெயலலிதா அனுதாபம் தெரிவிக்கவில்லை. சசிபெருமாள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதி உதவி செய்ய வேண்டும்.

புழலில் போராட்டம்
டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஒழிக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். மதுவிலக்கிற்காக பேராடியாக மாணவர்களை இன்னும் புழல் சிறையில் அடைத்து வைத்துயிருக்கிறார்கள். எந்தவித நிபர்ந்தனையும் இல்லாமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி புழல் சிறையின் முன்பு போராட்டம் நடத்துவோம்.

திமுகவுடன் கூட்டணியில்லை
தமிழகத்தில் எல்லாத துறையிலும் ஊழல் மலிந்துவிட்டது. ஊழல் இல்லாத ஆட்சியை தேமுதிக மட்டுமே கொடுக்க முடியும். சட்டசபை நிகழ்ச்சிகளை என்றைக்கு நேரடி ஒளிபரப்பு செய்கிறார்களோ அன்றைக்கு தான் சட்டசபைக்கு விஜயகாந்த் செல்லுவார். வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். அதிமுகவை மட்டும் விமர்சித்து பேசுவதால் திமுகவுடன் கூட்டணியா என்று நினைத்துவிட வேண்டாம்.

தவறு செய்யமாட்டோம்
கடந்த முறை, சேலத்தில் நடந்த பொது கூட்டத்தில் யாருடன் கூட்டணி என்று கேட்டுவிட்டு தான் கூட்டணியில் சேர்ந்தோம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே, அதிமுகவுடன் கூட்டணியில் சேர்ந்தோம். இனி வரும் காலங்களில் ஒரு போதும் அந்த தவறை செய்யமாட்டோம். இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications