"தளபதி"க்கு பரிசாக வந்த ஒரு வயசு ராஜகுதிரை... சுழி 10 இருக்காம்!
திரவிட முன்னேற்றக்கழக தொண்டர்களினால் தளபதி என்று பாசத்தோடு அழைக்கப்படும் மு.க.ஸ்டாலினுக்கு அவரது ஆதரவாளர் ஒருவர் குதிரை ஒன்றை பரிசளித்துள்ளார். கம்பீரமான அந்தகுதிரையைப் பற்றித்தான் இப்போதைக்கு பரபரப்பான பேச்சாக உள்ளது.
மன்னர் காலத்தில் படை நடத்தும் தளபதிகளுக்கு குதிரைகள்தான் வெற்றியை தேடித்தருவதில் முக்கிய பங்காற்றி உள்ளது.

வரலாற்றில் குதிரைக்கு என்று தனி இடம் உள்ளது. உலகப்புகழ் பெற்ற அலெக்சாண்டர் முதல் நெப்போலியன் உள்ளிட்ட பலரும் குதிரைகளில்தான் பயணம் செய்து இருக்கின்றனர்.
தி.மு.க.வின் தளபதி என்று அந்த கட்சி தொண்டர்களால் போற்றப்படும் மு.க.ஸ்டாலினுக்கு திருவண்ணாமலையை சேர்ந்த ஷாகிர்ஜா என்ற தொண்டர் குதிரை குட்டி ஒன்றை பரிசளித்தார். நான்கரை அடி உயரம் கொண்ட இந்த குதிரை குட்டிக்கு ஒரு வயதாகிறது.
செம்பொன் நிறம் கொண்ட இந்த குதிரை ராஜ குதிரை ஆகும். ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் மன்னர்கள் வாரிசுகளிடம் வாங்கி உள்ளனர்.
தவமணி, கமலக்கண்ணன் உள்பட 10 விதமான சுழிகள் உள்ளன. இவ்வளவு சுழிகள் கொண்ட குதிரை அரிதானது மட்டுமல்ல வெற்றியையும் தேடித்தருமாம்.
இந்த மாதிரி குதிரை ஒன்றை வாங்கி பரிசளிக்க வேண்டும் என்று அந்த தொண்டர் கடந்த 7 ஆண்டுகளாக காத்திருந்துள்ளார். இந்த ஆண்டுதான் கிடைத்துள்ளது. இது 9 அடி உயரம் வரை வளருமாம்.
இந்த குதிரை இருந்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் குதிரை குட்டி பரிசளித்ததாக அந்த தொண்டர் பெருமிதத்துடன் கூறினார்.
குதிரையுடன் ஸ்டாலின் சும்மா கம்பீரமாக போஸ் கொடுக்கவே உற்சாக விசிலடித்தனர் தொண்டர்கள்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications