ஆர்கே நகர் மக்களே..மருதுகணேஷை ஜெயிக்க வச்சா கருணாநிதியே வந்து நன்றி சொல்வார்.. திமுகவின் புது யுக்தி
ஆர்.கே.நகர் மக்கள் திமுக வேட்பாளர் மருதுகணேஷை வெற்றி பெற வைத்தால் கருணாநிதியே வந்து நன்றி சொல்வார் என்று திமுகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
சென்னை: ஆர்.கே.நகர் மக்கள் திமுக வேட்பாளர் மருதுகணேஷை வெற்றி பெற செய்தால் கருணாநிதியே வந்து நன்றி தெரிவிப்பார் என்று திமுகவினர் புதிய பிரசார யுத்தியை கையில் எடுத்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஓராண்டாக உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை தற்போது மெல்லத் தேறி வருவதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் முரசொலி அலுவலகத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னர் கருணாநிதி அழைத்து வரப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கருணாநிதி அண்ணா அறிவாலயத்துக்கும் வருகை தருவார் என்று நமது ஒன் இந்தியா தமிழ் தளம் செய்தி வெளியிட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு அண்ணா அறிவாலயத்துக்கு வந்த கருணாநிதி அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். இது நமது செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது.
இதேபோல் ஆர்கே நகர் தொகுதிக்கும் கருணாநிதி வருகை தர வாய்ப்புள்ளது என்றும் நமது தளம் பதிவிட்டிருந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, தினகரன் அணி, பாஜக, நாம் தமிழர் கட்சி என போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை வெற்றி பெற செய்தால் திமுக தலைவர் கருணாநிதியே வந்து நன்றி சொல்வார் என்று திமுகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர். திமுகவினர் சொல்வதை பார்த்தால் இன்னும் ஓரிரு நாட்களில் திமுக பிரசார மேடையில் கருணாநிதி தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications