For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. விடுதலையை எதிர்த்த கர்நாடக அரசு ‘அப்பீல்’ செய்வது மகிழத்தக்க செய்தி: கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.

அவரது பேட்டி,

கேள்வி: ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு அப்பீல் செய்ய முடிவு செய்திருக்கிறதே. அதைப் பற்றி தங்கள் கருத்து என்ன?

DMK chief M Karunanidhi welcomes Karnataka government's decision

கருணாநிதி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு அப்பீல் செய்யப் போவதாக; வந்துள்ள செய்தி மகிழத்தக்க செய்தியாகும். நீதியை நிலைநாட்ட யார் முன்வந்தாலும் அவர்களை வரவேற்கத்தயாராக இருப்பவன் நான் என்பதால், கர்நாடக அரசின் முடிவை வரவேற்கிறேன்.

கேள்வி: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை பெரும்பாலான எதிர்க்கட்சிகள், உங்களைப் போலவே புறக்கணித்திருக்கிறார்களே?

கருணாநிதி: தமிழ்நாட்டில் தற்போது தேர்தல்கள் எப்படி நடைபெறுகிறது என்பதை ஏற்கனவே நேரில் உணர்ந்த கட்சிகள், இனியும் தாங்கள் இந்த ஜனநாயக முரண்பாடுகளுக்குப் பலியாகத் தயாராக இல்லை என்பதால்தான், இந்த இடைத் தேர்தலை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. இது வரவேற்கத்தக்க செய்தியாகும்.

கேள்வி: ஐ.ஐ.டி. மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் ஆதரவு நல்கியபோதும், ஜெயலலிதா அரசுத் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஒரு அறிக்கைக்கூட வெளியிடவில்லையே?

கருணாநிதி: ஜெயலலிதா தலைமையிலான அரசு இது பற்றி வாய் திறந்தால்தான் ஆச்சரியம்!

கேள்வி: தாழ்த்தப்பட்ட மாணவ சமுதாயத்தின்மீது நடக்கிற தாக்குதல்கள் என்று இதனை எடுத்துக் கொள்ளலாமா?

கருணாநிதி: ஐ.ஐ.டி. மாணவப் பிரச்சினை குறித்து கழகத்தின் சார்பில் நானும், பொருளாளர் தம்பி ஸ்டாலினும் விளக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளோம். அதில் எல்லா விவரங்களும் இடம் பெற்றுள்ளன. கழகத்தின் சார்பில் இதற்காக அங்கே ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுள்ளது.

கேள்வி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட ‘டிராபிக்'ராமசாமி உங்களிடம் ஆதரவு கேட்டிருந்தாரே; உங்கள் நிலைப்பாடு என்ன?

கருணாநிதி: ‘டிராபிக்' ராமசாமி அவர்கள் பல கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார். அதுபோலத்தான் எங்களையும் கேட்டிருக்கிறார். நாங்கள் அதைப் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறோம்.

English summary
DMK President M Karunanidhi today welcomed Karnataka government's decision to appeal against the acquittal of his arch rival and Tamil Nadu chief minister Jayalalithaa in the disproportionate assets case, saying he supports anyone who 'comes forward to uphold justice.'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X