For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவில் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காதது ஏன்?: சு.சுவாமி போடும் குண்டு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தாமல், கருணாநிதியே மீண்டும் முதல்வர் வேட்பாராக களம் இறங்கியது ஏன் என்பது குறித்து பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி புது விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி உருவாகாத சூழ்நிலையில், பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி, ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், பாஜக திமுகவோடு கூட்டணி வைக்கலாம் என்று தெரிவித்தார்.

பேட்டி வெளியானதும், அவசர, அவசரமாக திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. ஸ்டாலினுக்கே விருப்பம் இல்லாமல் கருணாநிதி, காங்கிரசோடு கூட்டணி அமைத்ததாக கிசுகிசுக்கப்பட்டது.

முதல்வர் வேட்பாளர்

முதல்வர் வேட்பாளர்

இந்த நிலையில், கருணாநிதி தான்தான் திமுகவின் முதல்வர் வேட்பாளர் என்பதையும் அறிவித்துவிட்டார். இயற்கையாக தனக்கு ஏதாவது நேர்ந்தால்தான், ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக முடியும் என்றும் கருணாநிதி கூறிவிட்டார்.

சுப்பிரமணியன் சுவாமி கருத்து

சுப்பிரமணியன் சுவாமி கருத்து

இந்நிலையில், ஸ்டாலினை ஏன் திமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்பது குறித்து டிவிட்டரில் சுப்பிரமணியன் சுவாமி கருத்து கூறியுள்ளார்.

கிறி்ஸ்தவர் நலன்

கிறிஸ்தவர்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது திமுக-காங்கிரஸ் கூட்டணி. இதில் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லை என்பதால் அவரை கருணாநிதி ஒதுக்கி விட்டார். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

பிஷப் கவுன்சில் ஆதரவு

பிஷப் கவுன்சில் ஆதரவு

மேலும், தனது வாதத்திற்கு வலு சேர்க்கும்வகையில், தமிழ்நாடு பிஷப் கவுன்சில், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ள செய்தியையும், ரீடிவிட் செய்துள்ளார், சுப்பிரமணியன் சுவாமி.

இந்துக்களுக்கு ஆதரவு

இந்துக்களுக்கு ஆதரவு

நமக்கு நாமே என்ற பிரசாரத்தின்போது, கோயில்களுக்கு ஸ்டாலின் சென்றார். ஸ்டாலின் மனைவி துர்காவும் அவ்வப்போது கோயில்களுக்கு சென்று சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர். திமுகவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் என்று ஸ்டாலின் கூறியது நினைவுகூறத்தக்கது.

English summary
DMK Congi alliance was on Vatican inspiration. Stalin deviated so MK wheeled in and pushed him aside, says Subramanian Swamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X