For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கு ஆதரவான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு திமுக கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

தமிழகத்தின் 15வது சட்டப் பேரவைக்கான தேர்தல் பணிகள் தொடங்கியது முதல் தமிழகத் தேர்தல் ஆணையம் எந்த அளவுக்கு தவறான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது என்பதைப் பற்றி கழகத்தின் சார்பில் தொடர்ந்து பல முறையீடுகளை நேரிலே தமிழகத் தேர்தல் ஆணைய ரிடமும், டெல்லியிலே உள்ள தலைமைத் தேர்தல் ஆணையரிடமும் அளித்துள்ளோம்.

சரியான வாக்காளர் பட்டியலே, சுதந்திரமான நேர்மையான தேர்தலுக்கு அடிப்படை என்று வரையறை செய்யப்பட்டிருக்கும்போது, இறுதியாக தேர்தல் ஆணையம் வெளி யிட்ட வாக்காளர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்து, அதிலே எத்தனை போலி வாக்காளர்கள், இரட்டை வாக்காளர்கள் பெயர்கள் இருக்கின்றன என்ற எண்ணிக்கையைப் பார்த்தாலே தேர்தல் ஆணையத்தின் வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்த நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

Karunanidhi

வாக்கு எண்ணிக்கையின் போது, முதல் ஒன்றிரண்டு சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையிலேயே, இறுதியாக எந்த அணி வெற்றி பெறும் என்று நிச்சயமாகத் தெரியாதிருந்த நிலையிலேயே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர் கள் தொலைபேசியில் ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்ற செய்தி தொலைக்காட்சிகளில் கூறப்பட்டது. அதையும் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொண்டு தான் இருந்தது.

மேலும் 22-5-2016 அன்று கருணாநிதி எழுதிய "தேர்தல் கமிஷனா? தில்லுமுல்லு செய்யும் கமிஷனா?" என்ற உடன்பிறப்பு மடலில் தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் பற்றி அடுக்கடுக்காக விவரித்துள்ளார். அதே மடலில், தேர்தல் ஆணையம், அரவாக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல்களை எந்தக் கட்சியையும் விசாரிக்காமல் தன்னிச்சையாக மூன்று வாரங்களுக்கு, ஆளுங்கட்சி யின் விருப்பத்தை மட்டும் மனதிலே நிறுத்தி தள்ளி வைத்திருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பின் போதும், ஜெயலலிதாவின் அடிமையாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றும், தஞ்சை, அரவக்குறிச்சியில் மூன்று வாரங் களுக்குப் பிறகே தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததற்கு மாறாக, முன்கூட்டியே அங்கே தேர்தலை நடத்தாவிட்டால் தானே களத்தில் இறங்கி அறப்போராட்டம் நடத்தப் போவதாகவும் கருணாநிதி அறிவித்திருக்கிறார்.

இந்தப் பிரச்சினை பற்றி அமைப்புச் செயலாளர், ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, அதில் மூத்த வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகியிருக்கிறார். 21-5-2016 அன்று இந்த வழக்கு உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்து, கண்ணை மூடிக் கொண்டு தேர்தல் தேதிகளை முடிவு செய்வதா என்று கேட்டதோடு, அரசியல் கட்சிகளை முறையாகக் கலந்தாலோசித்த பின்னர் மே 27ஆம் தேதிக்குள் தேதியை அறிவிக்க வேண்டு மென்றும், தி.மு.கழகம் அளித்துள்ள புகார்களைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

எனவே தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடங்கியதிலிருந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்ற வரை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அ.தி.மு.க. வுக்கு ஆதரவாகவும், பாரபட்சமாகவும் தான் இருந்தன என்பதை இந்தச் செயற்குழு எடுத்துக் காட்டுவதுடன், தேர்தல் ஆணையத்தின் தொடர்ச்சியான இத்தகைய ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானச் செயல்பாடுகளை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

வாக்காளர்களுக்கு நன்றி

தமிழகச் சட்டப் பேரவைக்கான 2016 பொதுத் தேர்தலில் பதிவான 4 கோடியே 32 இலட்சத்து 62 ஆயிரத்து 906 வாக்குகளில், 39.7 சதவிகித வாக்குகளை அதாவது 1 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 374 வாக்குகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணி பெற்றுள்ளது. 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 35 லட்சத்து 13 ஆயிரத்து 816 வாக்குகள் கிடைத்ததைவிட தற்போது அதிகமாக இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 36 லட்சத்து 61 ஆயிரத்து 558 வாக்குகள் கிடைத்துள்ளன என்ற நிலையில் - கழகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு, பெரு நம்பிக்கையோடு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும், கழகத்தின் தலைமைச் செயற் குழு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

கருணாநிதி, ஸ்டாலினுக்கு பாராட்டு

1957ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் கருணாநிதி 13 முறை போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றதோடு, இந்த முறை திருவாரூர் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டு, 1 இலட்சத்து 21 ஆயிரத்து 473 வாக்குகளைப் பெற்று, தமிழ்நாட்டிலேயே இப்போது நடைபெற்ற தேர்தலில் மற்ற எந்த வேட்பாளரையும் விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில், அதாவது 68 ஆயிரத்து 366 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுச் சரித்திரச் சாதனை படைத்ததற்காக இந்தச் செயற் குழு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு, தற்போது நடைபெற்ற தேர்தலையொட்டி, கழகக் கூட்டணியின் சிறப்பான வெற்றிக்காக தலைவர் கலைஞர் அவர்கள் தனது 92 வயதிலும் மெய்வருத்தம் பாராமலும், கண் துஞ்சாமலும் பிரச்சார வேனிலும், புகை வண்டியிலுமாகத் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்து ஓயாது உழைத்தமைக்காக செயற்குழு தனது நெஞ்சம் நிறைந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.

அதுபோலவே கருணாநிதியால் ‘நமக்கு நாமே' என்று பெயர் சூட்டப்பட்ட பயணத் திட்டத்தை மேற்கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பல இலட்சக் கணக்கான மக்களைச் சந்தித்து, வாக்கு சேகரித்ததோடு, தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு, கருணாநிதியால் தவமிருந்து பெற்ற பிள்ளை என்ற பெயர் எடுத்த பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

English summary
DMK Executive committee has passed a resolution fro Anbunathan and Rs 570 crore issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X