For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலைந்து போன பொருளாளர் கனவு.. வருத்தத்தில் கனிமொழி?.. ஸ்டாலினின் திட்டம் என்ன?

திமுகவின் பொருளாளர் பதவி தனக்கு கிடைக்காததை எண்ணி கனிமொழி வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் பொருளாளர் பதவி தனக்கு கிடைக்காததை எண்ணி கனிமொழி வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவரின் முழு சம்மதத்துடன்தான் இந்த வேட்புமனு தாக்கல் நடந்துள்ளது, அவருக்கு வேறு ஒரு முக்கிய பதவி காத்திருக்கிறது என்று திமுக தரப்பில் பேச்சு அடிபடுகிறது.

திமுக கட்சி மாபெரும் மாபெரும் இருக்கிறது. நாளை மறுநாள் திமுக பொதுக்குழு கூடுகிறது. மிகவும் பரபரப்பான சமயத்தில் கூடும் இதில் திமுக தலைவர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடக்க உள்ளது.

திமுகவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கண்டிப்பாக ஒருமனதாக வெற்றிபெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கனிமொழி வரவில்லை

கனிமொழி வரவில்லை

பொதுவாக திமுகவில் பெரிய நிகழ்வுகள் என்ன நடந்தாலும் கனிமொழி அதில் கலந்து கொள்வது வழக்கம். சமயங்களில் மிக சிறிய நிகழ்வுகளில் கூட அவர் கலந்து கொள்வார். ஆனால் கட்சியில் இன்று நடந்து இருக்கும் இவ்வளவு பெரிய நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் இன்று காலையில் இருந்து கனிமொழி கோபாலபுரம் இல்லம் பக்கமே வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதிர்ச்சியில் இருக்கிறாரா?

அதிர்ச்சியில் இருக்கிறாரா?

இதனால் கனிமொழி அதிர்ச்சியில் இருக்கிறாரா, என்று தொடர்களுக்கு இடையே சந்தேகம் எழுந்துள்ளது. கனிமொழி திமுகவின் பொருளாளர் பதவியை பெற வாய்ப்புள்ளது என்று முதலில் தகவல் வெளியானது. இந்த நிலையில் அந்த பதவிக்கு துரைமுருகன் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இதனால், கனிமொழி அதிர்ச்சியில் இருக்கிறாரா என்று சந்தேகம் எழுப்பி இருக்கிறார்கள்.

ஏற்கனவே தெரிவித்துவிட்டார்

ஏற்கனவே தெரிவித்துவிட்டார்

ஆனால், இந்த பொருளாளர் பதவி குறித்து கனிமொழியிடம் ற்கனவே பேசி முடிவெடுத்துவிட்டதாக கோபாலபுரம் தரப்பு கூறுகிறது. கட்சியில் மூத்த உறுப்பினர் துரைமுருகன்தான், அவருக்குத்தான் கண்டிப்பாக பொருளாளர் பதவி என்று ஏற்கனவே கனிமொழியிடம் ஸ்டாலின் பேசிவிட்டதாக தகவல்கள் வெளியாகிறது. அண்ணன் எடுக்கும் முடிவு சரிதான் என்றுதான் கனிமொழியும் நினைப்பதாக கோபாலபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

துணை பொதுச்செயலாளர்

துணை பொதுச்செயலாளர்

அதே சமயம் கனிமொழிக்கு பெண்கள் மத்தியிலும், தென்தமிழகத்திலும் பெரிய அளவில் செல்வாக்கு உள்ளது. இதனால் கண்டிப்பாக கனிமொழிக்கு பெரிய பதவி கொடுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. பெரிய பதவி என்னும் பட்சத்தில் திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியை கனிமொழிக்கு தேர்தல் நடத்தாமல் வழங்க வாய்ப்புள்ளது என்று முக்கிய திமுக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

English summary
DMK Election: Sources says that Kanimozhi is not upset over the nominations for the party positions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X