Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அயல்நாட்டு தூதர்களாக தமிழர்கள், சேதுக்கால்வாய் திட்டம், ஈழத் தமிழரிடம் பொதுவாக்கெடுப்பு

Subscribe to Oneindia Tamil

22. புலம்பெயர்ந்தோர் நலன் (Migrance Welfare)

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களுக்கு உரிய சட்ட ஆலோசனை வழங்குவதற்கும், அவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இந்திய தூதரகங்களில் ஒரு சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட மத்திய அரசை வலியுறுத்துவோம்.

வெளிநாடுகளில் வசித்துவரும் இலட்சக்கணக்கான தமிழர்களின், ஜனநாயக - பொருளாதார உரிமைகளையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதற்காக இயங்கும் வேலை வாய்ப்பு நிறுவனங்களை முறையாகப் பதிவு செய்து, அவற்றின் பணிகளைக் கண்காணிப்பதற்கு அமைப்பு ஒன்றினை உருவாக்கிட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

sethusamudram

23. அயல்நாட்டு தூதர்களாக தமிழர்கள் நியமனம்

தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் நாடுகளில் இந்தியத் தூதர்களாக தகுதி வாய்ந்த தமிழர்களே நியமிக்கப்பட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

24. சேது சமுத்திரத் திட்டம் (Sethu Samuthram Scheme)

அறிஞர் அண்ணா அவர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம், தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக, மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தமிழக அ.தி.மு.க. அரசின் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டப் பணிகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட வழியில் தொடரலாம் என பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது.

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால், தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து போகும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் மூலம் தென்தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்படும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பயண நேரம் குறையும்; எரிபொருள் மீதமாகும். ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கே பெரிய அளவில் வளமும் நன்மையும் கிடைக்கும்.

தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு; தென் மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு, அண்ணா அவர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லையென்று, இந்தத் திட்டத்தினால் ஏற்படும் நன்மைகளையெல்லாம் மறந்து விட்டு, திட்டத்திற்கு எதிராக உச்ச நீதி மன்றத்திலேயே மனு தாக்கல் செய்திருப்பது; தென்மாவட்டங்களின் தொழில், பொருளாதார வளர்ச்சி, மற்றும் வேலைவாய்ப்பை முடக்கி தமிழர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகமாகும். பிற்போக்குச் சக்திகளின் முயற்சிகளை முறியடித்து, 75 விழுக்காடு பணிகள் முடிந்த நிலையில் தாமதமாகி வரும் சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி முடித்திடத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பாக, திட்டப்பணிகள் தொடங்குவதற்குச் சாதகமாக பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கினை விரைவுபடுத்தி முடித்து, சேது சமுத்திரத் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்றிட இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி, தென்னக வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டுமென தி.மு.கழகம் வலியுறுத்தும்.

25. இரண்டாவது விண்கல ஏவுதளம் (Second Rocket Launch in Central)

இந்திய வானியல் துறையின் "இஸ்ரோ" அமைப்பு தனது இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் திட்டம் 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அறிவித்திருக்கிறது. புதிய ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

அறிவியல் அடிப்படையிலும், பூகோள ரீதியாகவும், பாதுகாப்பு கோணத்திலும் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இந்த ஏவுதளம் அமைக்கப்பட வேண்டுமென்று தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.

ஏவப்படும் செயற்கைக் கோளின் எடையின் அடிப்படையிலும் - ஏவுதளத்திற்கு எடுத்துச் செல்லும் தூரம் மற்றும் செலவினங்கள் அடிப்படையிலும் - குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைவது விண்கலன்களை ஏவும் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் என்பதாலும்; தென்தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 40,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதாலும், குலசேகரப்பட்டினத்தில் "இரண்டாவது ராக்கெட் ஏவுதளம்" அமைத்திட தி.மு.கழகம் தொடர்ந்து­ வற்புறுத்தும்.

இந்திய வான்வெளி - திரவ உந்துவிசை தொழில் நுட்ப மையம் (Indian - Liquid propulsion system centre)

திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் "இந்திய வான்வெளி - திரவ உந்துவிசை தொழில் நுட்ப மையம்" அமைத்திட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும். இம்மையத்தை அமைப்பதன் மூலம் இம்மண்டலமே வளர்ச்சி பெற்ற மண்டலமாக நிச்சயம் மாற்றமடையும் என்பதோடு நமது நாட்டில் தொழில் நுட்பப் புரட்சிக்கு வித்திடும் பகுதியாகவும் அது உருவாகும்.

நமது நாட்டில் வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை தொடர்பான நிபுணத்துவம் மிக்கவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். விமானங்கள் வடிவமைப்பு, ஹெலிகாப்டர் வடிவமைப்பு, அதிவேக விமானங்கள் உருவாக்கம், வான்வெளி தொழில் நுட்ப ஆய்வுகள் ஆகியவை சார்ந்த படிப்புகளுக்கு திரவ உந்து விசை தொழில் நுட்ப மையம் (Liquid Propulsionளூரனை ஞசடியீரடளiடிn) தகுதி வாய்ந்த ஒரு சிறப்பு நிறுவனமாக இருக்கும் என்பதாலும், இந்நிறுவனம் ஏற்படுத்தப்படுவதால், தமிழகத்திலிருந்து ஏராளமான விஞ்ஞானிகள் உருவாக வாய்ப்பு ஏற்படும் என்பதாலும், திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் "திரவ உந்துவிசை தொழில் நுட்ப மையம்" அமைத்திட தி.மு.கழகம் பாடுபடும்.

26. கச்சத் தீவு (Katchath theevu)

இந்திய நாட்டின் இறையாண்மைக்குக் கட்டுப்பட்ட கச்சத்தீவின் உரிமையை இலங்கை நாட்டுக்கு விட்டுக் கொடுப்பது சம்பந்தமான பிரச்சினை நாடாளுமன்றத்தில் முறைப்படி விவாதிக்கப்பட்டோ, அரசியல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டோ, அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் அல்ல என்பதால் அது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், எனவே அந்த ஒப்பந்தம் செல்லாது என்றும் தெரிவிக்க வேண்டுமென்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலே இருக்கும்போது, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடை செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதை திரும்பப் பெறச்செய்து கச்சத் தீவினை மீட்கும் முயற்சியில் தி.மு.கழகம் தீவிரமாக ஈடுபடும்.

27. ஈழத் தமிழர் பிரச்சினை (Eelam Tamil Issue)

இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலை, மற்றும் இன அழிப்புக் கொடுமைகளைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் மீண்டும் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இப்பிரச்சினையில் இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்று கடந்த 2009 முதல் உலகத் தமிழ்ச் சமுதாயமும், சர்வ தேச சமூகத்தின் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

இதே காரணங்களுக்காக தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் "டெசோ" (Tamil Eelam Supporter's Organisation) அமைப்பு தீர்மானங்களை நிறைவேற்றி இந்திய அரசிற்கும்

ஐ.நா. மன்றத்திற்கும் அதன் பிரதான உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பியுள்ளது.

கடந்த காலத்தில் இரண்டு முறை இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவினால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

எனவே இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், இனப் படுகொலை ஆகியவை குறித்து சுதந்திரமானதும், நம்பகத் தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திட தொடர் முயற்சிகளை தி.மு.கழகம் மேற்கொள்ளும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப் போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய, வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையில் ஐ.நா. மேற்பார்வையில் "பொது வாக்கெடுப்பு" நடத்தவும், இடைக்கால நிவாரணமாக முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில், 13வது அரசியல் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளை நடைமுறைப்படுத்திடவும் இலங்கை அரசை வலியுறுத்தி தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்ற இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்தும்.

போரின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, வேலை வாய்ப்பு -- வேளாண்மை மற்றும் வீடுகள் ஆகியவற்றை இழந்த ஈழத் தமிழர்களுக்கு மீள் குடியேற்றமும், இந்தியா போன்ற நாடுகள் வழங்கும் பொருளாதார உதவிகள் முறையாக அவர்களுக்குச் சென்றடையவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று தி.மு.கழகம் வலியுறுத்தும்.

மேலும், தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு அடிப்படை மற்றும் உயர்கல்வி வழங்கிட ஆவன செய்ய வேண்டும் என்றும்; தமிழ்ப் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தைத் தடுக்கவும், தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும் தமிழர் வழிபாட்டுத் தலங்கள் முதலியவற்றை பாதுகாத்திடவும் தி.மு.கழகம் வலியுறுத்தும்.

1984ஆம் ஆண்டு முதலே தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் பல்வேறு இடங்களில் அரசால் அமைக்கப் பட்டிருக்கும் முகாம்களில் தங்கியிருக்கின்றனர். இவர்களை இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின்கீழ் விருப்பத்திற்கேற்ப மறு குடியமர்த்தி அவர்கள் தமிழகத்திலே நிரந்தரமாக வாழ வழி வகை செய்வதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+