எம்எல்ஏக்கள் விற்பனைக்கு.. அதிமுக எம்எல்ஏக்களை கேலி செய்யும் பதாகைகளுடன் திமுக முழக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு களேபரங்களுக்கு இடையில் இன்று கூடிய தமிழக சட்டசபையில் கூவத்தூர் பணப்பட்டுவாடா பேரம் குறித்து திமுக எம்எல்ஏ-க்கள் பதாகைகளுடன் முழக்கங்களையிட்டனர்.

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்தப்படாமலேயே பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவு பெற்றது. இதைத் தொடர்ந்து திமுக கோரிக்கை மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் தமிழக சட்டசபை ஜூன் 14 முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை கூடுவதாக அறிவிக்கப்பட்டது.

DMK MLAs protest with banners which quotes MLA for sale

இதனிடையே தனியார் ஆங்கில தொலைகாட்சி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் அதிமுகவின் எம்எல்ஏ-க்களான மதுரை தெற்கு தொகுதி சரவணனும், சூலூர் தொகுதி கனகராஜும் பேரம் பேசுவது குறித்து வீடியோ வெளியானது.

முன்னதாக கூவத்தூர் விவகாரத்தால் அதிமுக நடத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி திமுக நீதிமன்றத்தை நாடியது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் கூவத்தூர் பேரம் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் அதிமுக அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றனர். இதைத் தொடர்ந்து இன்று சட்டசபை கூடியது.

அப்போது கூவத்தூர் பேரம் குறித்து விவாதிக்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரினார். அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து "எம்எல்ஏ-க்கள் விற்பனைக்கு (MLA for Sale)" என்ற பதாகைகளை திமுக எம்எல்ஏ-க்கள் ஏந்தியபடி முழக்கினர். இதனால் பதற்றம் நிலவி வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Strom hit in TN Assembly on sting operation conducted by English media. DMK MLAs shows banners quoting MLA for Sale.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற