சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு… அதனால் வெளிநடப்பு: ஸ்டாலின்
சென்னை: மவுலிவாக்கம் கட்டிட விபத்து பற்றியும் சேஷசமுத்திரம் கலவரம் பற்றியும் சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால், வெளிநடப்பு செய்ததாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
சட்டசபையின் நான்காம் நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. முதல்வர் 110 விதி எண் கீழ் அறிக்கை வாசித்த உடன், ஸ்டாலின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச முற்பட்டார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனைக்கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்த நீதிபதி ரகுபதி அறிக்கை முழுமையாக இல்லை என்றார். சி.எம்.டி.ஏ அதிகாரிகளை நீதிபதி ரகுபதி கமிஷன் விசாரிக்கவில்லை என்றார்.
மேலும் அரசுக்கு சாதகமாக ரகுபதி கமிஷன் அறிக்கை தயாரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். விசாரணைக்கு முன்பே தமது அரசுக்கும், விபத்துக்கும் தொடர்பு இல்லை என ஜெயலலிதா கருத்து கூறியிருந்ததை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
உயர்நீதிமன்றம் கேள்வி கேட்ட பிறகே ரகுபதி கமிஷன் அறிக்கை அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நீதிபதி ரகுபதி கமிஷன் அறிக்கை முழுமை பெறாத அறிக்கை என்றும் அவர் கூறினார்.
விசாரணை கமிஷனுக்கான விதிமுறைகள் அறிக்கை தயாரிக்க பின்பற்றப்படவில்லை என்றார். கட்டிடம் கட்டுவதற்கு முன் 2 அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதற்காக பிறப்பிக்கப்பட்டது என்பதற்கு அறிக்கையில் விளக்கம் இல்லையென்றும் கூறியுள்ளார்.
இதனிடையே தமிழக சட்டசபையில் இருந்து காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் வெளி நடப்பு செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications