நாளை திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு?: இலவச அறிவிப்புகள் இருக்காது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக தனது தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடுகிறது என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 24ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

DMK to release its election manifesto tomorrow

இந்நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடும் என்று கூறப்படுகிறது. அந்த அறிக்கையில் தமிழக மீனவர் பிரச்சனை, இலங்கை தமிழர்கள் பிரச்சனை, சேதுசமுத்திர திட்ட செயலாக்கம், பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாடு, ஆடு, டிராக்டர் என்று இலவச அறிவிப்புகள் ஏதும் இருக்காது என்றே தெரிகிறது.

திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழு தயாரித்துள்ளது.

இந்த குழு தயாரித்த அறிக்கையில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை செய்துவிட்டு அறிக்கையை கருணாநிதி நாளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+