For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தல்: திமுகவில் பைனல் லிஸ்ட் ரெடி: இவங்கதான் வேட்பாளர்களாமே?

By Mayura Akilan
|

சென்னை: திமுகவில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் பைனல் லிஸ்ட் ரெடியாகவிட்ட நிலையில் சில வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களுக்கு இழுபறி நீடிப்பதால் பட்டியலை வெளியிடாமல் மவுனம் காக்கிறது திமுக தலைமை.

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் விருப்பத்திற்கு ஏற்பவே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறதாக கூறப்படுகிறது.

சமுதாய பலம், பணபலம், ஆகியவற்றை அளவுகோலாக கொண்டே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனராம்.

திருவள்ளூர் தனி

திருவள்ளூர் தனி

திருவள்ளூர் (தனி) தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோற்ற காயத்ரி ஸ்ரீதரன்தான் வேட்பாளர் என்று முடிவாகியுள்ளது. இது தலைவரின் விருப்பமாம். ஆனால் தலைமைக்கழக வழக்கறிஞர் பரந்தாமனை ஸ்டாலின் டிக் செய்துள்ளாராம்.

கனிமொழியின் சிபாரிசு

கனிமொழியின் சிபாரிசு

கள்ளக்குறிச்சி தொகுதிக்கு வழக்கறிஞர் செல்வநாயகம், தியாகதுருவம் ஒன்றியச் செயலாளர் கார்த்திக்கேயன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாம். இதில் செல்வநாயகத்திற்கு கனிமொழியும், செல்வநாயகத்திற்கு எ.வ.வேலுவும் சிபாரிசு செய்துள்ளனராம்.

சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் உறுதி

சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் உறுதி

கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதிகளை சிட்டிங் எம்.பிக்களான சுகவனம், தாமரைச் செல்வன் ஆகியோருக்கே ஸ்டாலின் உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரைக்கு

திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரைக்கு

திருவண்ணாமலை தொகுதிக்கு சி.என்.அண்ணாதுரையின் பெயரை டிக் செய்துள்ளாராம் தலைவர். கடலூர் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரனின் பெயரை ஸ்டாலின் டிக் செய்திருக்கிறாராம்.

சபாநாயகரின் மகனுக்கு சீட் இல்லையா?

சபாநாயகரின் மகனுக்கு சீட் இல்லையா?

நெல்லை தொகுதிக்கு முன்னாள் சபாநாயகர் மகன் பிரபாகரன் பெயர் பரிசீலிக்கப்பட்டதாம். நேர்காணலில் ஒன்றரை கோடி வரை செலவு செய்வேன் என்று கூறினாராம் பிரபாகரன். ஆனால் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் தேவதாஸ் சுந்தரம் எடுத்த எடுப்பிலேயே 25 கோடி ரூபாய் வரை செலவு செய்ய முடியும் என்று கூறியதால் சீட் அவருக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

ஜெகனுக்கு ஜெயமாகுமா?

ஜெகனுக்கு ஜெயமாகுமா?

தூத்துக்குடியில் சிட்டிங் எம்.பி ஜெயதுரை மீது அதிருப்தி நிலவுவதால், மாவட்ட செயலாளர் பெரியசாமியின் மகன் ஜெகனுக்கே ஜெயம் என்கின்றனர்.

கன்னியாகுமரிக்கு மூவர் மூவ்

கன்னியாகுமரிக்கு மூவர் மூவ்

கன்னியாகுமரி தொகுதியில் சிட்டிங் எம்.பி ஹெலன் டேவிட்சன் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை. அதனால் மனோ தங்கராஜ், எப்.எம்.ராஜரத்தினம், ஆஸ்டின் ஆகியோரிடையே கடுமையான போட்டி என்கின்றனர்.

குஷ்புக்கு மத்தியசென்னை

குஷ்புக்கு மத்தியசென்னை

மத்திய சென்னையில் முஸ்லீம் வாக்குகள் அதிகம் உள்ளதால் இங்கு நடிகை குஷ்புவை களமிறக்க கருணாநிதி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தயாநிதி மாறன் தென்சென்னைக்கு மாறுகிறார் என்கின்றனர்.

வடமாவட்டங்களில் பைனலில் நுழைந்தவர்கள்

வடமாவட்டங்களில் பைனலில் நுழைந்தவர்கள்

தொகுதிவாரியாக ரெடியான பைனல் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளவர்கள்

திருவள்ளூர் - காயத்ரி ஸ்ரீதரன் அல்லது வழக்கறிஞர் பரந்தாமன்

வடசென்னை - மா. சுப்ரமணியம், மத்திய சென்னை - குஷ்பு, தென்சென்னை - தயாநிதிமாறன்.

ஸ்ரீ பெரும்புதூர் - டி.ஆர். பாலு அல்லது ஜெகத் ரட்சகன், காஞ்சிபுரம் ( தனி) முன்னாள் எம்.எல்.ஏ சங்கரி நாராயணன், அரக்கோணம் - ஜெகத்ரட்சகன், வேலூர் - கதிர் ஆனந்த், கிருஷ்ணகிரி - சுகவனம் தர்மபுரி - தாமரைச்செல்வன், திருவண்ணாமலை - சி.என். அண்ணாதுரை, ஆரணி - வேணுகோபால், விழுப்புரம் ( தனி) செ.புஷ்பராஜ்

மேற்கு மாவட்டங்களில் பைனல் லிஸ்ட்

மேற்கு மாவட்டங்களில் பைனல் லிஸ்ட்

சேலம் - உமா செல்வராஜ், நாமக்கல் - காந்தி செல்வன், ஈரோடு - சச்சிதானந்தம், திருப்பூர் - முன்னாள் மேயர் செல்வராஜ், நீலகிரி(தனி) - ஆ.ராசா, கோவை - வழக்கறிஞர் விஜயசேகர் அல்லது வீரகோபால், பொள்ளாச்சி - பைந்தமிழ் பாரி அல்லது பொங்கலூர் பழனிச்சாமி, கள்ளக்குறிச்சி - செல்வநாயகம், கரூர் - சின்னச்சாமி

மலைக்கோட்டைக்கு ரகுபதி

மலைக்கோட்டைக்கு ரகுபதி

திண்டுக்கல் - காந்திராஜன், திருச்சி - புதுக்கோட்டை அப்துல்லா அல்லது ரகுபதி, பெரம்பலூர் கே.சி.பி சிவராமன், கடலூர் - சபா.ராஜேந்திரன், நாகை - ஏ.கே.எஸ் விஜயன், தஞ்சை - பழனிமாணிக்கம்.

கூட்டணி கட்சிகளின் தொகுதிகள்

கூட்டணி கட்சிகளின் தொகுதிகள்

சிதம்பரம்(தனி) - திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), ஹைதர் அலி ( மமக) ராமநாதபுரம் - காதர் மைதீன் ( முஸ்லீம் லீக்), தென்காசி - டாக்டர் கிருஷ்ணசாமி ( புதிய தமிழகம் )

வைகோவை எதிர்க்கும் தளபதி

வைகோவை எதிர்க்கும் தளபதி

இவை தவிர தென் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கும் திமுகவில் லிஸ்ட் தயாராகிவிட்டது. அதில் சிவகங்கை தொகுதிக்கு ஜோன்ஸ் ரூஸோ போட்டியிடுகிறார். மதுரை - செ.ராமச்சந்திரன், தேனி - கம்பம் செல்வேந்திரன், விருதுநகர் கோ.தளபதி அல்லது ஏ.ஆர்.சீனிவாசன், தூத்துக்குடி எம்.பி. ஜெகன், திருநெல்வேலி தேவதாஸ் சுந்தரம், கன்னியாகுமரி - மனோ தங்கராஜ் அல்லது எப்.எம். ராஜரத்தினம், புதுச்சேரி - நஜீம்.

சில பெயர்கள் மாற வாய்ப்பு

சில பெயர்கள் மாற வாய்ப்பு

இந்த லிஸ்ட்டில் உள்ள பெயர்கள் அனைத்துமே தலைவரும், ஸ்டாலினும் இணைந்து டிக் செய்துள்ளனர். கடைசி நேரத்தில் சி தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் வேட்பாளர்கள் பெயர் மாற வாய்ப்புள்ளது என்கின்றனர்.

English summary
Diravida Munnetra Kazhagam (DMK) has shortlisted names for Lok Sabha constituencies in TamilNadu and Pudhucherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X