ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளராக தலித்- கனிமொழி வாக்குறுதியால் திமுகவுக்கு கடும் நெருக்கடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த்தை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில் திமுக புதிய நெருக்கடியில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

திமுகவில் ஸ்டாலின் தரப்பு கை ஓங்கிய நிலையில் காங்கிரஸை ஓரம்கட்ட முயற்சித்தார். காங்கிரஸுக்கு பதிலாக தமிழ் மாநில காங்கிரஸை உள்ளே கொண்டுவர ஸ்டாலின் தரப்பு மும்முரமானது.

ஆனால் கனிமொழி தரப்புதான் காங்கிரஸை கூட்டணியில் இணைத்தது. இதை வேண்டா வெறுப்பாக ஸ்டாலின் தரப்பும் ஏற்றுக் கொண்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் பாஜகவின் மறைமுக ஆதிக்கம் உச்சகட்டத்தை எட்டியது.

பாஜகவுக்கு எதிர்ப்பு

பாஜகவுக்கு எதிர்ப்பு

தொடக்கத்தில் திமுக இந்த விவகாரத்தில் ரொம்பவே அமைதி காத்தது. பின்னர் மெல்ல மெல்ல பாஜகவுக்கு எதிராக ஸ்டாலின் தரப்பு குரலை உயர்த்தியது. இதனால் காங்கிரஸின் 'கைகளை' இறுக்கமாக பற்றிக் கொண்டிருக்கிறது இப்போது.

பாஜகவுடன் நெருக்கம்

பாஜகவுடன் நெருக்கம்

அதேநேரத்தில் கனிமொழி தரப்பு இப்போது மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார். இதனால்தான் ஜிஎஸ்டி மசோதாவை ராஜ்யசபாவில் திமுக எதிர்க்கவில்லை.

கனிமொழி வாக்குறுதி

கனிமொழி வாக்குறுதி

அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பான விவாதங்களில், நீங்கள் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்துங்கள் பார்க்கலாம் எனவும் கனிமொழி தரப்பு பாஜகவுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறதாம். இப்போது தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக தலைமை.

திமுக ஆதரவு?

திமுக ஆதரவு?

இதைத் தொடர்ந்து கனிமொழி மூலம் திமுகவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் பாஜக மும்முரமாகியுள்ளது. கனிமொழியும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிக்கும் நிலையில் ஸ்டாலின் தரப்புக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources said that DMK will support to the BJP's Presidential Candidate Ramnath kovind.
Please Wait while comments are loading...