கொடைக்கானலை வெள்ளைக்காரர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள்? பேரழகியை கண்டுபிடிக்க காரணமாக இருந்த கிராமம்
கொடைக்கானல்: சுற்றுலாவிற்கு என்றே கண்டுபிடித்த ஒரு குளுகுளு நகரம் என்றால் அது கொடைக்கானல் தான். கொடைக்கானலை வெள்ளைக்காரர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா? கொடைக்கானலுக்கு வெள்ளைக்காரர்கள் முதன் முதலாக போன பாதை எது தெரியுமா? அந்த பாதை இன்று வரை குதிரைப்பாதையாக உள்ளது. கொடைக்கானல் கண்டுபிடிக்கப்பட்ட கதை குறித்த சுவராஸ்யமான வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க உருவாக்கப்பட்ட மலைவாசஸ்தலம் தான் கொடைக்கானல். 1821 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் சர்வேயரான லெப்டினன்ட் பிஎஸ் வார்டு, கோடை வெப்பம் மற்றும் தொற்றுநோய்களில் இருந்து தப்பிக்க விரும்பினார். மேலும் மதுரையிலும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் பணிபுரியும் வெளிநாட்டு மிஷனரிகள் வாழ்வதற்கு ஆரோக்கியமான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அப்படி பிரிட்டிஷ் சர்வேயரான லெப்டினன்ட் பிஎஸ் வார்டு கண்டுபிடித்த இடம் தான் கொடைக்கானல் இவர் கொடைக்கானல் சென்ற முதல் ஐரோப்பியர் ஆவார்.

கொடைக்கானலில் வெள்ளையர்கள் வருவதற்கு முன்பே பழங்குடி சமுதாயத்தினர் வசித்து வந்தார்கள். இவர்கள் தேனி மாவட்டம் பெரியகுளத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். கொடைக்கானல் செல்ல பெரியகுளம் அடுத்த கும்பக்கரை அருவி வழியாக அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்றால் வெள்ளகவி என்ற கிராமம் வரும்.அதன் வழியாகவே கொடைக்கானலை வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்தார்கள்.
கொடைக்கானல் உச்சியை அடைந்ததும். அங்கிருந்த காலநிலை வெள்ளைக்காரர்களுக்கு மிகவும் பிடித்து போனது. அற்புதமான காலநிலை மற்றும் சுத்தமான காற்று காரணமாக வெள்ளைக்கார குடும்பங்களுக்கு மிகவும் பிடித்து போனது.. எனினும் அந்த காலத்தில் குதிரை, மாட்டு வண்டி அல்லது பல்லக்கில் பயணம் செய்துதான் கொடைக்கானல் போக முடியும். 1834ம் ஆண்டு மதுரை ஆட்சியர் தேவதானப்பட்டியிலிருந்து ஏறி, கொடைக்கானலில் ஒரு சிறிய பங்களாவைக் கட்டினார். அதன்பின்னர் 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தான், கொடைக்கானல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேவாலயங்கள் மற்றும் பிற காலனித்துவ கட்டமைப்புகள் உருவாகி. 1895 இல் யூனியன் தேவாலயம் மற்றும் ஏராளமான தனியார் பங்களாக்கள் சில அழகான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட நகரம் என்பதால் இதனை வெள்ளைக்காரர்கள் பார்த்து பார்த்து பக்குவமாக வடிவமைத்தார்கள்..
1863 ஆம் ஆண்டு மதுரையின் ஆட்சியராக இருந்த சர் வெரே ஹென்ட்ரி லெவிங்கே 60 ஏக்கர் பரப்பளவுள்ள கொடை ஏரியை மூன்று ஓடைகளை அணைத்து உருவாக்கினார். இது முற்றிலும் செயற்கை ஏரியாகும். இதுதான் இன்றைய கொடைக்கான்ல நட்சத்திர ஏரியாகும். இந்த ஏரியில் அவர் மீன்களை பெருக்கம் செய்ய வைத்தார். அத்துடன் தூத்துக்குடியில் இருந்து முதல் படகையும் கொண்டு வந்தார். 1890 இல் கொடைக்கானலில் ஒரு படகு சங்கம் உருவாக்கப்பட்டது. மே 1929 முதல், கிளப் சுற்றுலாப் பயணிகளை தற்காலிக உறுப்பினர்களாகச் சேரவும் படகு சவாரி வசதிகளைப் பெறவும் அனுமதி அளிக்கப்பட்டது.
கொடைக்கானலில் கிறிஸ்தவ மிஷனரிகள் தேவாலய சொத்துக்களை நிறுவினர். பல வெளைக்காரர்கள்பலர் கோடை விடுமுறை இல்லங்களைக் கட்டினர். கிளப்கள், பள்ளிகள் மற்றும் ஹோட்டல்கள் வந்தன. பல வசதிகள் உருவாகின, கொடைக்கானல் அற்புதமான சுற்றுலா நகரமாக வளர்ந்தது. அங்கு வெள்ளைக்காரர்கள் படிப்பதற்காகவே புகழ்பெற்ற கொடைக்கானல் சர்வதேச பள்ளியையும் நிறுவினார்கள். சென்னையில் இருந்து திருநெல்வேலி வரை போடப்பட்ட ரயில் பாதை கொடைக்கானலை இந்தியா முழுவதும் அப்போது இருந்த வெள்ளைக்காரர்களுக்கு மிகவும் பிரபலமாக்கியது. கொடைக்கானலில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அம்மைநாயக்கனூரில் ஒரு ரயில் நிலையம் கட்டப்பட்டது அதுதான் கொடைரோடு ரயில் நிலையம்.
1875 இல் ஆரம்பிக்கப்பட்ட முதல் நீராவி ரயில் கொடைக்கானலுக்கு வர விரும்பிவோரின் பயணத்தை எளிதாக்கியது. கொடைக்கானல் நன்கு வளர்ந்த நிலையில், மதுரையில் இருந்து நேரடியாக கார்கள் மற்றும் வாகனங்களில் வரும் வகையில் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டார்கள், இந்த பாதை தேவதானப்பட்டி அடுத்த காட்ரோட்டில் அமைக்கப்பட்டது.. 1914 ஆம் ஆண்டு சாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தது. 1916 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு சாலை திறக்கப்பட்டது. அதன்பிறகுசுற்றுலாப் பயணிகள் அப்பகுதிக்கு அதிக அளவில் வரத் தொடங்கினர். கொடைக்கானல் மிக வேகமாக வளர்ந்துள்ளது.
இதனிடைமேய கொடைக்கானல் கண்டுபிடிக்க காரணமாக இருந்த வெள்ளகவி கிராமம் 400 ஆண்டுகள் ஆனநிலையில் இன்று வரை சாலை வசதிகள் இல்லை.. கொடைக்கானலில் இருந்து வட்டக்கானல் சென்று அங்கிருந்து 3 மணி நேரம் நடந்தால் தான் அங்கு போக முடியும். கும்பக்கரை வழியாகவும் போகமுடியும். ஆனால் அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனத்துறை அனுமதியுடன் தான் போக முடியும். உலகின் அற்புதமான இடங்களில் ஒன்றான இந்த இடத்தை பார்த்து இப்போது பார்த்தாலும் மெய்சிலிர்த்து போவீர்கள். கொடைக்கானல் என்ற பேரழகியை கண்டுபிடித்த வெள்ளைக்கார்களுமே இந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டார்கள் என்பதே உண்மை. இந்த பகுதி இயற்கை விரும்பிகளுக்கு மிகவும் பிடித்த இடம் ஆகும்.












Click it and Unblock the Notifications