நாங்கள் முதல்வர் ஆக ஒரு தலையணையே போதும் என சொன்ன சசி கணவர் நடராஜன்- சேதுராமன் 'ஷாக்' பேச்சு
முதல்வர் நாற்காலியில் நாங்கள் உட்காருவதற்கு ஒரே ஒரு தலையணை போதும் என சசிகலா கணவர் நடராஜன் பேசியதாக மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன் வெளியிட்ட தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை: முதல்வர் நாற்காலியில் உட்கார தங்களுக்கு ஒரே ஒரு தலையணை இருந்தாலே போதும் என சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியதாக மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் வெளியிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரி சென்னை உட்பட தமிழகத்தில் 36 இடங்களில் ஓபிஎஸ் அதிமுகவினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் அதிமுகவின் பல்லாயிரக்கணக்கில் திரண்டனர். இது சசிகலா அணியினரை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஓபிஎஸ் உண்ணாவிரதம்
சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் பங்கேற்று பேசியதாவது:

நடராஜன் பிரஸ் மீட்
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சசிகலாவின் கணவர் நடராஜன் பிரஸ் மீட் ஒன்றை நடத்தினார். அந்த பிரஸ் மீட் முடிவில் ஆப் த ரெக்கார்டாக சில பத்திரிகையாளர்களிடம் நடராஜன் பல விவகாரங்களை பேசினார்.

2 மாதத்தில் சி.எம்
அப்போது அடுத்த 2 மாதத்தில் நாங்கள் முதல்வர் பதவியை கைப்பற்றிவிடுவோம் என கூறியிருக்கிறார். தேர்தல் தற்போதுதானே முடிவடைந்துள்ளது... அதற்குள் எப்படி முதல்வராக முடியும்? மீண்டும் தேர்தல் என்றால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகுமே என சில பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

ஒரே ஒரு தலையணை போதுமே
ஆனால் நடராஜனோ, நாங்க முதல்வர் ஆவதற்கு எதுக்கு அத்தனை ஆயிரம் கோடி செலவு செய்யனும்? ஒரே ஒரு தலையணை போதுமே... முதல்வர் ஆகிவிடுவோமே என நடராஜன் கூறியிருந்தார். இந்த தகவலை என்னிடம் பத்திரிகையாளர்கள் தெரிவித்த போது அதிர்ச்சியடைந்தேன். இவ்வாறு சேதுராமன் கூறினார்.
சேதுராமனின் இந்த பேச்சு பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ளது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications