வண்டிக்கு வழி விட மறுத்த டிரைவரின் காதைக் கடித்துத் துப்பிய இன்னொரு டிரைவர்.. திண்டுக்கல்லில்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வாகனத்திற்கு வழி விட மறுத்த டிரைவரின் காதை மற்றொரு டிரைவர் கடித்துத் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே, புதூரில் வசித்து வருபவர்கள் சித்திரவேல் (25), முத்துப்பாண்டி (25). டிரைவர்களான இருவரும் நேற்று, திண்டுக்கல்லில் இருந்து சிறுமலைக்கு, அவரவர் வாகனங்களில் பணிக்குச் சென்றனர்.
அப்போது முத்துப்பாண்டியின் வாகனத்திற்கு முன்னால் சென்றது சித்திரவேலின் வாகனம். நீண்டநேரம் தனக்கு பாதை கொடுக்கும் படி ஹார்ன் அடித்து வலியுறுத்தியுள்ளார் முத்துப்பாண்டி. ஆனால், சித்திரவேல் பாதை கொடுக்கவில்லை. இதனால் சித்திரவேலின் வாகனத்தைப் பின் தொடர்ந்தே செல்லவேண்டிய நிர்ப்பந்தம் முத்துப்பாண்டிக்கு ஏற்பட்டது.
நீண்ட முயற்சிக்குப் பின் ஒரு வழியாக சித்திரவேலின் வாகனத்தை முந்திச் சென்றார் முத்துப்பாண்டி. சித்திரவேலின் வாகனத்திற்கு குறுக்கே தனது வாகனத்தை நிறுத்திய முத்துப்பாண்டி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, ஆத்திரத்தில் சித்திரவேலின் வலது காதை கடித்துத் துப்பினார் முத்துப்பாண்டி. வலியால் துடித்த சித்திரவேல், உடனடியாக சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு காதின் சிறு நரம்புகள் சேதமடைந்ததால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications