நல்லா குடிச்சாச்சு.. எழுந்திருக்க முடியலை.. தண்டவாளத்திலேயே படுத்துத் தூங்கியவரின் இரு கால்களும் கால
சேலம்: நன்கு குடித்ததால் போதை தலைக்கேறி எழுந்திருக்க முடியாததால் தண்டவாளத்திலேயே படுத்துத் தூங்கி விட்ட ஒரு குடிகாரர் தனது இரு கால்களையும் ரயிலுக்குப் பறி கொடுத்து கதறிக் கொண்டிருக்கிறார் இப்போது.
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் சேலம்-கடலூர் மார்க்கத்திலான ரயில் பாதை உள்ளது. இங்குள்ள ரயில்வே கேட்டை கடந்ததும் ரயில்வே துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. புதர்கள் நிரம்பியுள்ள இந்தப் பகுதியில் தினசரி பலரும் உட்கார்ந்து ஜாலியாக மது அருந்துவது வழக்கம். ரயில் தண்டவாளத்தையொட்டி உள்ள பகுதி என்பதால் அதன் ஆபத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதே கிடையாது.
நேற்றும் மாலையில் சிலர் கூடி மது அருந்தியுள்ளனர். அதில் ஒரு நபர் ஓவராக குடித்ததால் போதை தலைக்கேறி எழுந்திருக்கக் கூட முடியாமல் தண்டவாளத்தில் விழுந்து விட்டார். அப்படியே படுத்து விட்டார். அவரது இரு கால்களும் தண்டவாளத்தில் கிடந்தன. உடல் வெளியே கிடந்தது. அப்போது அந்த வழியாக சேலம் - விருத்தாச்சலம் பயணிகள் ரயில் வந்துள்ளது. அந்த ரயில் இ்நத நபரின் மேல் ஏறியது. இதில் அவரின்இரு கால்களும் துண்டிக்கப்பட்டு விட்டன.
ரத்தம் வெளியேற மயங்கிக் கிடந்த அந்த நபரை அப்பகுதி வழியாக போனவர்கள் பார்த்து ரயில்வே போலீஸாருக்குத் தகவல் சொல்லி அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர் யார் எந்த ஏரியாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications