சென்னையில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் மழைநீர்....கொசுக்கடியால் தோற்று நோய் பரவும் அபாயம்
சென்னை: சென்னையில் பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களில் நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் ஏராளமாக பெருகியுள்ள நிலையில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக ஆங்காங்கே பணிகள் தொய்வுற்று காணப்படுகிறது. பல இடங்களில் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி உள்ளதால் கொசுக்கள் ஏராளமாக உருவாகி பல்வேறு விதமான தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பல்வேறு விதமான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு இடங்களில் கொசு மருந்து அடித்து வருகிறது. தேங்கிய மழைநீர் மற்றும் குடிநீர் தொட்டிகளில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களை இதுபோன்ற தொற்றுநோய்கள் மற்றும் மர்ம காய்ச்சலில் இருந்து காக்கும் விதமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நிலவேம்பு குடிநீர் மற்றும் மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அம்மா உணவகங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 17-ந்தேதி தொடங்கப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் ராஜீவ்காந்தி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனைகளில் மட்டும் 44 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
3.2 கோடி கொசுக்களை ஊருக்குள் விடப் போகும் கூகுள்! பின்னணியில் மெகா ஸ்கெட்ச்! அமெரிக்கா அனுமதிக்குமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications