நண்பனே இனி இனம் பார்த்து பழகு.. களம் பார்த்து கால் வை.. இது துரைமுருகன் அட்வைஸ்.. யாருக்கு தெரியுமோ?
ஈரோடு: நண்பனே இனி இனம் பார்த்து பழகு, களம் பார்த்து கால் வை என்று துரைமுருகன், வைகோவுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை பகுதியில் மதிமுகவின் மாநில மாநாடு மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது. பெரியார் பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா, வைகோவின் பொது வாழ்வு பொன் விழா ஆகியன முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

விலாசம்
இந்த விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் நானும் வைகோவும் கருணாநிதியால் வளர்க்கப்பட்டவர்கள். அவரால் விலாசம் கிடைக்கப் பெற்றவர்கள்.

பார்த்து பழகு
எந்த உயரத்தில் பறந்தாலும் கருணாநிதி என்ற சக்தி எங்கள் இதயத்தில் இருப்பதால் தான் எங்களால் அரசியலில் இருக்க முடிகிறது. நண்பனே இனி இனம் பார்த்து பழகு, களம் பார்த்து கால் வை.

இரங்கல்
நானும் வைகோவும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நண்பர்கள் என்றார். முன்னதாக இந்த விழாவில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்
விழாவில் தி.க தலைவர் கி.வீரமணி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கருணாநிதியின் உருவப்படமும் திறக்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக அரசு ஆகியவற்றை வீழ்த்துவதற்கு திமுக தலைமையில் தோழமைக் கட்சிகளுடன் அணி சேர்ந்து மதிமுக தனது கடமையை மேற்கொள்ளும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications