பொங்கல் பண்டிகையின் போது ரூ. 605 கோடிக்கு மது விற்பனை.. திருச்சி முதலிடம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் மது விற்பனை 605 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இதில் திருச்சி மண்டலத்தில் மட்டும் ரூ.143 கோடிக்கு மது விற்பனையாகி முதலிடம் பிடித்திருக்கிறது.
தமிழகத்தில் மது விற்பனை என்பது சாதாரண நாட்களில் ரூ.80 முதல் 90 கோக்கு ஆகும். அதேசமயம் பண்டிகை சமயங்களில் இது இரட்டிப்பு ஆகும்.

அந்த வகையில் பொங்கல் பண்டிகையின் போது அதாவது 14. 15. 17 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் ரூ.605 கோடிக்கு மதுவிற்பனையாகி உள்ளது.
14ம்தேதியான போகி பண்டிகை அன்று ரூ.178 கோடிக்கும், 15ம் தேதியான பொங்கல் பண்டிகை அன்று ரூ.253 கோடிக்கும் 17ம் தேதி காணும் பொங்கல் அன்று 174 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது.
இதில் திருச்சி மண்டலத்தில் மட்டும் ரூ.143 கோடிக்கு மது விற்பனையாகி முதலிடத்தை பிடித்திருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications