கோபி சுற்றுவட்டார கிராமங்களில் நிலநடுக்கமா...? அதிர்ச்சியில் மக்கள்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே காசிபாளையம், நல்ல கவுண்டன்பாளையம், கரட்டுபாளையம் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள காசிபாளையம், நல்ல கவுண்டன்பாளையம், கரட்டுபாளையம் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

 Earth quake in Erode villages

அந்த நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள், வீட்டை விட்டு ஓடி வந்து தெருக்களில் ஒன்று கூடினர். சிலர் வீடுகளில் நிலநடுக்கத்தால் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து சிலர் கூறுகையில் ஈரோடு மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1000-1500 அடிக்குக் கீழ் சென்றுள்ளதால், மிக ஆழத்தில் போர் போடுகின்றனர். இதனால் கூட இந்த அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Erode district Kasipalayam, Nalla goundanpalayam villages mild earthquake occurred and people came to street with fear.
Please Wait while comments are loading...