For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியார் சிலையை அகற்றுவேன் என எச் ராஜா பேசியது கண்டனத்துக்குரியது- எடப்பாடி

பெரியார் சிலையை அகற்றுவேன் என எச் ராஜா பேசியது கண்டனத்துக்குரியது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    எச். ராஜா பல்டி வாக்குமூலத்தின் உண்மைத் தன்மை அறியப்படும்... ஓ.பன்னீர்செல்வம் உறுதி!- வீடியோ

    சென்னை: பெரியார் சிலையை அகற்றுவேன் என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கூறியது கண்டனத்துக்குரியது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    மகளிர் தின விழா இன்று அதிமுக தலைமை கழகத்தில் கொண்டாடப்பட்டது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அதில் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், பெரியார் சிலையை அகற்றுவேன் என எச்.ராஜா பேசியது கண்டனத்துக்குரியது.

    உரிய மரியாதை

    உரிய மரியாதை

    தமிழகத்துக்கு கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார். தலைவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்.

    ஜெ. வழி ஆட்சி

    ஜெ. வழி ஆட்சி

    தலைவர்கள் சிலையை சேதப்படுத்த முயற்சித்தால் கடும் நடவடிக்கை. சிறப்பான ஆட்சியை மக்களுக்கு ஓராண்டு தந்துள்ளோம். எம்ஜிஆர், ஜெ. வழியில் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறோம்.

    அதிமுக கருத்து அல்ல

    அதிமுக கருத்து அல்ல

    தமிழகத்தில் வெற்றிடம் என்பதே கிடையாது. அப்படி வெற்றிடம் ஏற்பட்டதாக ஏசிஎஸ் கல்லூரி விழாவில் சைதை துரைசாமி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. அது அதிமுகவின் கருத்தல்ல.

    பரிசீலனையில் உள்ளது

    பரிசீலனையில் உள்ளது

    திருச்சியில் காவல் ஆய்வாளரால் கர்ப்பிணி இறந்தது துரதிர்ஷ்டவசமானது. இறந்த உஷாவுக்கு இழப்பீடு தருவது குறித்து அரசின் பரிசீலனையில் இருக்கிறது என்றார் எடப்பாடி.

    English summary
    Edappadi Palanisamy condemns H Raja for his comment about Periyar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X