ஸ்டாலின் விவசாயினு சொல்வாரு நம்பாதீங்க... ஏன்னா அவர் போலி விவசாயி... போட்டு தாக்கிய எடப்பாடியார்!
தஞ்சாவூர்: அதிமுக அரசு விஞ்ஞான பூர்வமான முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
நான் ஒரு விவசாயி. ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாது.அவர் போலி விவசாயி என்று முதல்வர் குற்றம்சாட்டி பேசினார்.
முக்கியமான தலைவர்கள் பிரசாரத்துக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு உள்ளதால், தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது.

தலைவர்கள் பிரசாரம்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பளார்கள் அறிவிப்பு முடிந்து தேர்தல் அறிக்கை வெளியிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மக்களிடம் குறைகளை கேட்காதவர் ஸ்டாலின்
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக அரசு விஞ்ஞான பூர்வமான முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆட்சியில் இருந்தபோது மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்காதவர் ஸ்டாலின்.

ஸ்டாலின் போலி விவசாயி
ஆனால் தற்போது தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் புகார் பெட்டி வைத்துக்கொண்டு மனுக்களை வாங்கி வருகிறார். நான் ஒரு விவசாயி. ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாது. கோட் சூட் போட்டுக்கொண்டு விஞ்ஞான பூர்வமான விவசாயியாக ஸ்டாலின் உள்ளார். அவர் போலி விவசாயி என்று முதல்வர் குற்றம்சாட்டி பேசினார்.

களைகட்டிய தேர்தல் திருவிழா
முன்னதாக தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் பிரச்சாரம் செய்தார். முக்கியமான தலைவர்கள் பிரசாரத்துக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு உள்ளதால், தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications