For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிற்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் பிரியாவிடை

தமிழகத்துக்கு முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை திரும்புகிறார். அவரை சந்தித்து முதல்வர், துணைமுதல்வர் சந்தித்து பிரியாவிடை அளித்த

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்திற்கு புதிய ஆளுநர் பதவியேற்க உள்ள நிலையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிற்கு பிரியாவிடை அளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முதல்வருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் ஆளுநரை சந்தித்து பிரியாவிடை அளித்தனர்.

முழுநேர ஆளுநர் நியமனம்

முழுநேர ஆளுநர் நியமனம்

கடந்த 13 மாதங்களாக தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவி வகித்து வந்தார் வித்யாசாகர் ராவ். தமிழகத்துக்கு முழுநேர ஆளுநராக மேகாலாயாவில் ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொறுப்பு ஆளுநர்க பதவியேற்பு

பொறுப்பு ஆளுநர்க பதவியேற்பு

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 30ஆம் தேதி, முன்னாள் ரோசய்யா 5 ஆண்டுகள் ஆளுநராக இருந்து பதவி காலத்தை நிறைவு செய்தார். அதனையடுத்து அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகஸ்டு 31ஆம் தேதி, வித்யாசாகர் ராவை பொறுப்பு ஆளுநராக நியமித்தார்.

ஆளுநர் வந்தாலே பிளாஷ் நியூஸ்

ஆளுநர் வந்தாலே பிளாஷ் நியூஸ்

தமிழகம் பல இக்கட்டான அரசியல் சூழ்நிலைகளை சந்தித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் தமிழகத்துக்கென்று முழுநேர ஆளுநர் இல்லாமல் மஹாராஷ்ட்ராவின் ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவி வகித்தார். ஆளுநர் தமிழகம் வருவதே ஊடகங்களில் பிளாஷ் நியூஸ் ஆனது.

நீண்ட கால பொறுப்பு ஆளுநர்

நீண்ட கால பொறுப்பு ஆளுநர்

13 மாதங்கள் அவர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் போன்ற பெரிய மாநிலத்துக்கு 13 மாதங்கள் என நீண்ட காலம் ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்தது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு

ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு

புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் விரைவில் பதவியேற்க இருக்கிறார். இதனையடுத்து வித்யாசாகர் ராவ் மும்பை திரும்ப உள்ளார். இந்த நிலையில் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் வித்யாசாகர் ராவை சந்தித்து பிரியாவிடை அளித்தனர்.

English summary
CM Edapadi Palanisamy and Deputy CM O Panneerselvam today met Tamil Nadu Governor Vidyasagar rao at Raj bhavan in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X