கோவை, திருப்பூர் உட்பட 4 மாவட்டங்களில் ரூ.1313 கோடியில் வளர்ச்சி பணிகள்.. முதல்வர் தொடங்கி வைத்தார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: திருப்பூர், ஈரோடு, நீலகிரி,கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் 1313 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை கோவை கொடிசியா மையத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

Edappadi Palaniswami inaugurates Rs.1313 crores worth of welfare schemes

பின்னர் கொடிசியா வளாகம் சென்ற முதல்வர் வீடியோ கான்பரசிங் மூலம் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

கோவை மாவட்டத்தில் 1047.56 கோடி மதிப்பிலும், ஈரோடு மாவட்டத்தில் 108.21 கோடி மதிப்பீட்டிலும், திருப்பூரில் 89.45 கோடி மதிப்பீட்டிலும், உதகையில் 67.98 கோடி மதிப்பிலும் வளர்ச்சிப்பணிகள் துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் 12.12 கோடி மதிப்பீட்டில் 6200 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினார்.

ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயலாக்கம் பெற்று வருகின்றன என்று விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Edappadi Palanichami inaugurates Rs.1313 crores worth of welfare schemes in Coimbatore, Erode, Tirupur and Nilgiri districts.
Please Wait while comments are loading...