வருமானவரித்துறை அதிரடி... அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் டிஸ்மிஸ்?
வருமானவரித்துறையின் அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை: சொத்துகளை வருமான வரித்துறை அதிரடியாக முடக்கிய நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்கின்றன கோட்டை தகவல்கள்.
டிடிவி தினகரனின் வலது கரமாக செயல்பட்டவர் விஜயபாஸ்கர் என்பது ஆர்கே நகர் இடைத் தேர்தலில் அம்பலமானது. வருமானவரித்துறையின் பிடியில் சிக்கிய விஜயபாஸ்கர் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் எடப்பாடி கோஷ்டிக்கு தாவ தப்ப முயற்சித்தார்.

அதிரடி நடவடிக்கை
வருமானவரித்துறையின் விசாரணைக்குள்ளாக்கப்பட்ட நிலையிலும் டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்து பேசும் குழுவில் விஜயபாஸ்கரும் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் இன்று அவரது சொத்துகளை அதிரடியாக வருமான வரித்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

அமைச்சரவையில் ஓபிஎஸ் அணி
அதுவும் அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணையக் கூடிய நிலையில் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது பல்வேறு யூகங்களை கிளப்பிவிட்டுள்ளது. ஓபிஎஸ் கோஷ்டி இணையும் நிலையில் அந்த அணிக்கு இரு அமைச்சர்கள் பதவி தர எடப்பாடி கோஷ்டி முடிவு செய்துள்ளது.

துணை முதல்வராகும் ஓபிஎஸ்
ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவியும் மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனால் அமைச்சரவையில் எடப்பாடி பழனிச்சாமி மாற்றங்களை மேற்கொள்ள கூடும் என்றே கூறப்பட்டு வருகிறது.

அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ்?
தற்போது விஜயபாஸ்கர் மீதான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதால் அவர் அமைச்சரவையில் இருந்து கழற்றிவிடப்படலாம் என்கின்ற கோட்டைவட்டாரங்கள். அத்துடன் சசிகலா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதாலேயே இந்த நடவடிக்கை பாய்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications