ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியில் களைக்கட்டிய கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம்!
காரைக்குடியில் ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சிவகங்கை: காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இன்று கல்வி வளர்ச்சி நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ரோட்டரி கிளப் காரைக்குடி பியர்ல் சங்கமம் தலைவர் நாவுக்கரசு தலைமை வகித்தார். ரோட்டரி கிளப் காரைக்குடி பியர்ல் சங்கமம் துணை ஆளுநர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். ரோட்டரி கிளப் காரைக்குடி பியர்ல் சங்கமம் தலைவர் நாவுக்கரசு அனைவரையும் வரவேற்றார்.

கல்வி வளர்ச்சி நாள்
ரோட்டரி கிளப் காரைக்குடி பியர்ல் சங்கமம் செயலாளர் திஷாந்குமார், ரோட்டரி கிளப் காரைக்குடி பியர்ல் சங்கமம் பொருளாளர் குமரன், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் அழகு சுந்தரி மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியக்கழகத் தலைவர் சகாய அமலன் வாழ்த்துரை வழங்கினார்கள்.

காமராஜர் குறித்து கவிதை
இவ்விழாவில் ரோட்டரி கிளப் காரைக்குடி பியர்ல் சங்கமம் உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர். பொற்கிழிக்கவிஞர் நாகப்பன் காமராஜரைப் பற்றி கவிதை வாசித்தார். ஏழாம் வகுப்பு மாணவர் சுசேந்திரன் காமராஜரை பற்றி கவிதை வாசித்தார்.

காமராஜரின் சாதனைகள்
சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான பாகை கண்ணதாசன் காமராஜரின் இலவசக் கல்வித்திட்டம், மதிய உணவுத்திட்டம் பற்றியும், கல்விக்காக ஆற்றிய சேவைகளைக் குறித்தும், காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை பற்றியும், காமராஜரின் சாதனைகளைப் பற்றியும் சிறப்புரையாற்றினார்.

நூல் வெளியீடு
இந்நிகழ்வில் எழுத்தாளர் தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய "விடுதலை வேந்தர்கள்" நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை பேராசிரியர் பாகை கண்ணதாசன் வெளியிட, ரோட்டரி கிளப் காரைக்குடி பியர்ல் சங்கமம் துணை ஆளுநர் முத்துக்குமார் பெற்றுக்கொண்டார்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் கோமதி ஜெயம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர்முத்துவேல்ராஜன் செய்திருந்தார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications