அரக்கோணம் அருகே தங்கக் கம்மலுக்காக 8 வயது சிறுமி கடத்திக் கொலை
வேலூர்: அரக்கோணம் அருகே தங்கக் கம்மலுக்காக 8 வயது சிறுமி படுகொலை செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அருகே உள்ள வாலாஜா, வன்னியர்மேடு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது 8 வயது மகள் வினிதா. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
ஆண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில், கோடை விடுமுறைக்காக அரக்கோணம் அருகே உள்ள தனது தாத்தா ரங்கநாதன் வீட்டிற்கு சென்றிருந்தார் வினிதா.
இந்நிலையில், நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த வினிதாவைக் காணவில்லை என அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமி மாயமான இடத்திலிருந்து சுமார் 10 கி. மீட்டர் தாண்டி திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் விவசாய கிணற்றில் சிறுமி பிணமாக கிடப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி வினிதா காதில் தங்க கம்மல் போட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நகைக்காக ஆசைப்பட்ட மர்ம ஆசாமிகள், வினிதாவைக் கடத்திக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications