அநியாயமாக செத்துப் போன குக்கிராமத்து தேவதை.. அனிதா!
அரியலூர் மாவட்ட குக்கிராமத்தை சேர்ந்த அனிதாவின் மரணம் தமிழகத்தில் உள்ள அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது, இந்நிலையில் அனிதாவின் வாழ்க்கை குறித்த பின்னோட்டத்தை பார்க்கலாம்.
Recommended Video

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த அனிதா அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் கல்வியில் முன்னிலை பெற்றார். அனிதாவின் வாழ்க்கை குறிப்பேடுகளை இப்போது பார்க்கலாம்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது குழுமூர் கிராமம். நவீன தொழில்நுட்ப வசதிகள் அவ்வளவாக அறிமுகமில்லாத இந்த கிராமத்தை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி சண்முகம் என்பவரின் மகள் தான் அனிதா என்கிற வைரம். ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியைச் சேர்ந்த அனிதாவின் தாய் முகம் பாராமலே வளர்ந்தவர்.
ஏழ்மை என்பதால் தந்தையும் மகளை பிரிந்து சென்று வெளியூர்களில் மூட்டை தூக்கும் தொழிலை செய்து வந்தார். பாட்டியின் அரவணைப்பிலேயே வளர்ந்த அனிதா எப்போதும் புத்தகத்தை தழுவியபடியே இருப்பாராம்.

சவால்
பெரும்பாலான கிராமங்களில் வசிக்கும் மாணவர்களின் இன்றைய நிலை இது தான். முதல் தலைமுறை பட்டதாரி என்றால் நிலைமை இன்னும் மோசம், மற்றவர்களின் உதவியை நாடியே படிப்பை நம்பியிருக்க வேண்டியுள்ளது.

கழிப்பறை வசதி கூட கிடையாது
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 478 மதிப்பெண் பெற்ற அனிதாவிற்கு கட்டணமில்லாமல் உயர்கல்வியை வழங்க தனியார் பள்ளி ஒன்று முன்வந்துள்ளது. விடுதியில் தங்கிப் படிப்பதற்கு அனிதாவிற்கு விருப்பம் இல்லாவிட்டாலும், வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் +1, +2வை தனியார் பள்ளியில் படித்துள்ளார்.

பேரிடி
தனக்காக இல்லாவிட்டாலும், தன்னைப் போன்ற சமூகத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களுக்காகவாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே அனிதா தொடர்ந்து விடுத்து வந்த கோரிக்கை. நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் அனிதாவின் மருத்துவ கனவு தகர்ந்ததால் அந்த குடும்பமே பெரும் சோகத்தில் இருந்த நிலையில், மற்றொரு பேரிடியாய் அமைந்துள்ளது அனிதாவின் மரணம்.
அப்பாவி அனிதா
அனிதாவின் எம்பிபிஎஸ் ஆக வேண்டும் என்ற முயற்சி ஒரு தலைமுறையின் கனவு, முதல் தலைமுறை பட்டதாரியான கிராம்புற மாணவர்களுக்கு பல்வேறு சவால்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை கடந்து தான் வாழ்வில் ஜெயிக்க வேண்டும் என்ற உண்மை புரியாமலே உயிரைவிட்டுள்ளார் அப்பாவி அனிதா.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications