நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்! எம்ஜிஆர் பாடலுக்கு டவுன் பஸ்ஸில் டான்ஸ் ஆடிய பாட்டி! செம ஸ்டெப்பு
பொள்ளாச்சி: அரசு பேருந்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆர் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய மூதாட்டியின் வீடியோ தீயாய் பரவி வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தில் பழைய பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.
அதில் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தில் "நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்.. ஒரு மாம்பழம் வேண்டும் என்றார்.. " என்ற பாடல் ஓடி கொண்டிருந்தது.

எம்ஜிஆர் பாடல்
எம்ஜிஆர் பாடலை பல பயணிகள் தலையாட்டி ரசித்து கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மூதாட்டி ஒருவரும் எம்ஜிஆர் பாடலை ரசித்தார். திடீரென அந்த பாடலுக்கு எழுந்து நடனமாடினார். இவரது நடனத்தை சக பயணிகள் கைதட்டி ரசித்தனர். மேலும் பலர் தங்கள் செல்போன் வீடியோ எடுத்தனர்.

சிரித்தபடியே நடனம்
எனினும் அந்த பாட்டி சற்றும் வெட்கப்படாமல் சிரித்தபடியே ஆடிக் கொண்டிருந்தார். அந்த பாடலுக்கு எத்தனை நடன அசைவுகளை வெளியிட்டார் தெரியுமா, இசைக்கு தகுந்தபடி நடனம் ஆடினார் அந்த பாட்டி. இப்படி எடுத்த வீடியோக்களில் ஒன்றைதான யாரோ ஒருவர் சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்தார். கையில் சொடக்கு போட்டபடி பாடலை ரசித்து ஆடினார். ஒரு கையில் கம்பியை பிடித்துக் கொண்டு பாட்டி ஆடிய நடனம் காண்போரை வியக்க வைத்தது.

எம்ஜி- ஆர் சிவாஜி
எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் பெயர்களை அந்த காலத்தில் பச்சை குத்திக் கொண்டிருந்தனர். எம்ஜிஆருக்கு அத்தனை பேர் ரசிகர்களாக இருந்தனர். இதுவும் அவர் அரசியல் வாழ்க்கையில் சோபிக்க ஒரு காரணமாக இருந்தது என்றே சொல்லலாம். மேலும் திரைப்படத்தில் கூட எம்ஜிஆரை யாராவது அடித்தவிட்டால் அவ்வளவுதான்.

வில்லன் நடிகர்கள்
அந்த வில்லன் நடிகர் வீரப்பனாக இருந்தாலும் நம்பியாராக இருந்தாலும் அசோகனாக இருந்தாலும் மக்கள் கரித்து கொட்டி விடுவார்கள். இதே எம்ஜிஆர் பதிலுக்கு அடிக்க ஆரம்பித்தால், அடி தலைவா உடாதே தலைவா என இங்கிருந்தபடியே ஆர்ப்பரிப்பார்கள். அந்த அளவுக்கு எம்ஜிஆர் மக்கள் திலகமாக இருந்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications