தேர்தல் கூட்டணி பற்றி அறிவிப்பு எப்போது? பத்திரிகையாளரை சீண்டியபடி பதில் சொன்ன விஜயகாந்த்
சென்னை: அடுத்த மாதம் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் பத்திரிகையாளர்களிடம் அதுபற்றி தெரிவிக்க மாட்டேன் என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
பெரம்பலூரில் தேமுதிக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் உரையாற்றிய விஜயகாந்த், தேர்தல் கூட்டணி தொடர்பாக இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது.

தக்க நேரத்தில் சொல்வேன். அடுத்தமாதம் தேமுதிக மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று பேசினார். தேர்தல் கூட்டணி குறித்து பத்திரிகையாளர்களிடம் சொல்ல மாட்டேன், மக்களிடம்தான் சொல்வேன் என்றும் விஜயகாந்த் பேசினார்.
பிரேம லதா பேசுகையில், திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஊழலில் திளைத்துவிட்டது. இந்த இரண்டு கட்சிகளையும் அகற்ற வேண்டுமானால் கேப்டன் உரிய நேரத்தில் முடிவு எடுப்பார். இதனால் நீங்கள் எப்போதும் உழைக்க தயாராக இருக்க வேண்டும். உங்களின் உழைப்பால்தான் கேப்டன் அரியணை ஏறப்போகிறார் என்றார்.
பத்திரிகையாளர்களிடம் சொல்ல மாட்டேன் என்று சம்மந்தம் இல்லாமல் பேசி மீண்டும் நிருபர்களை சீண்டினார் விஜயகாந்த். கூட்டத்தில் பங்கேற்ற ஒரு நிருபர் சிரித்தபடி இப்படி சொன்னார், "பத்திரிகையாளர்களுக்கு அளிக்கும் பேட்டி சுவிஸ் பேங்க் கணக்கிற்கா போகப்போகிறது.. மக்களிடம்தானே அந்த தகவல் போகும். இவர் சம்மந்தம் இல்லாமல் பேசுகிறாரே" என்று.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications