ஓவர்.. ஓவர்! ஓபிஎஸ்ஸுக்கு அடைபட்ட கதவுகள்.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு! எடப்பாடிக்கு குஷி!
சென்னை : அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் மூலம் ஓபிஎஸ்ஸுக்கான கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்ட அதிகார மோதலைத் தொடர்ந்து, ஒற்றைத் தலைமை பேச்சு எழுந்தது. தலைமை பதவியைக் கைப்பற்றுவதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் போட்டி ஏற்பட்டது.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவைக் கூட்டினர். அப்போது அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்தனர். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடவும் விதிகளில் மாற்றம் கொண்டு வந்தனர்.
இந்த திருத்தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறி தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் சட்ட விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் ஓபிஎஸ் தரப்பால் தொடரப்பட்ட வழக்குகளால் தேர்தல் ஆணையம் முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்தது தேர்தல் ஆணையம். இதையடுத்து, நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்குகள் நடந்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைத்ததால் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளரக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

இந்நிலையில் அதன் அடுத்தகட்டமாக, பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தையும் அங்கீகரிக்கும் வகையில், பொதுக்குழுவில் திருத்தப்பட்ட அதிமுகவின் சட்ட விதிகளை அங்கீகரித்து இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் அதிமுக சட்ட விதிகள் முழுமையாக இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்று அதிமுகவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை ஓபிஎஸ்ஸுக்கு வாய்ப்பு இருக்கிறது எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஓபிஎஸ்ஸுக்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டுள்ளன.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications